Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கோர்காடு அரசு பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோர்காடு அரசு பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோர்காடு அரசு பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோர்காடு அரசு பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

ADDED : ஜூன் 24, 2025 03:20 AM


Google News
Latest Tamil News

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வில்லியனுார், ஜூன் 24-

கோர்காடு அரசு பள்ளியில் போதை பொருள் ஒழிப்பு மற்றும் பாலியல் குற்றங்கள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

கோர்காடு அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு பள்ளி துணை முதல்வர் முரளி தலைமை தாங்கி, போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து பேசினார். முன்னதாக பட்டதாரி ஆசிரியர் தமிழரசி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக மங்கலம் சப் இன்ஸ்பெக்டர் பெரியசாமி, போதை பொருளால் ஏற்படும் ஆபத்துக்கள் மற்றும் பாலியல் குற்றங்கள் தடுப்பு குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திப் பேசினார்.

பள்ளி தலைமை ஆசிரியர் திருக்காமீஸ்வரன் வாழ்த்துரை வழங்கினார். நிகழ்ச்சிகளை பள்ளி ஆசிரியர் பத்மாவதி தொகுத்து வழங்கினார்.