/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கடற்கரையில் கழிவுநீர் பாக்டீரியா அதிகரிப்பு தடுப்பு நடவடிக்கைக்கு அமைச்சர் உத்தரவு கடற்கரையில் கழிவுநீர் பாக்டீரியா அதிகரிப்பு தடுப்பு நடவடிக்கைக்கு அமைச்சர் உத்தரவு
கடற்கரையில் கழிவுநீர் பாக்டீரியா அதிகரிப்பு தடுப்பு நடவடிக்கைக்கு அமைச்சர் உத்தரவு
கடற்கரையில் கழிவுநீர் பாக்டீரியா அதிகரிப்பு தடுப்பு நடவடிக்கைக்கு அமைச்சர் உத்தரவு
கடற்கரையில் கழிவுநீர் பாக்டீரியா அதிகரிப்பு தடுப்பு நடவடிக்கைக்கு அமைச்சர் உத்தரவு
ADDED : ஜூன் 12, 2025 07:06 AM

புதுச்சேரி : புதுச்சேரி கடற்கரையில் கழிவு நீர் பாக்டீரியா தாக்கம் அதிகரித்துள்ள சூழ்நிலையில் தரத்தை மேம்படுத்துவது குறித்து அமைச்சர் லட்சுமிநாராயணன் தலைமையில் ஆய்வு கூட்டம் நடந்தது.
புதுச்சேரியில் குருசுகுப்பம், தேங்காய்திட்டு, காலாப்பட்டு கடற்கரைகளில் பேக்கல் காலிபார்ம் என்ற உமிழ் கழிவுநீர் பாக்டீரியாக்கள் அளவு அதிகமாக காணப்படுகிறது.இதை தடுத்து கடலின் நீரின் தரத்தை மேம்படுத்துவது குறித்து அமைச்சர் லட்சுமிநாராயணன் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடந்தது.
பொதுப்பணித்துறை செயலர் முத்தம்மாள், அறிவியல் தொழில்நுட்ப செயலர் யாசம் லட்சுமிநாராயண ரெட்டி, பொதுப்பணி தலைமை பொறியாளர் வீரசெல்வம், கண்காணிப்பு பொறியாளர் சுந்தரமூர்த்தி, செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் அமைச்சர் லட்சுமிநாராயணன் பேசியதாவது:
பொதுப்பணித் துறை தற்போது 15 எம்.எல்.டி., திறன் கொண்ட புதிய கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றை துப்புராயபேட்டையில் ஏற்படுத்தி வருகிறது. இது முடியும் தருவாயில் உள்ளது. இது மட்டுமின்றி 17 எம்.எல்.டி., திறனுடைய 3 கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் செயல்பாட்டில் உள்ளன. மேலும் 50 எம்.எல்.டி., திறனுள்ள மற்றொரு பெரிய கழிவு நீர் சுத்திகரிகப்பு நிலையம் துப்புராயபேட்டையில் ஆசிய அபிவிருந்தி வங்கியின் கடன் உதவியுடன் திட்டமிடப்பட்டுள்ளது.
கடலில் கடந்த ஜனவரி மாதம் எடுக்கப்பட்டஆய்வில் கழிவு நீர் பாக்டீக்கள் கலந்துள்ளது தெரிய வந்தது. எனவே கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மட்டுமின்றி வீடுகளில் நேரடியாக கழிப்பறை கழிவுகளை வாய்க்காலில் விடுவதை தடுக்க வேண்டும். எந்த அரசியல் அழுத்தங்கள் வந்தாலும் அவற்றை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.
தொடர்ந்து கூட்டத்தில், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை விரிவாக்கம் செய்வது, சுய சுத்திகரிப்பு முறைகள், கழிவுநீர் உருவாவதை தடுத்து, கட்டமைப்பை மேம்படுத்துவது, ஒழுங்குமுறை நடவடிக்கைகள், மக்களிடம் விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்வது என, முடிவுகள் எடுக்கப்பட்டன.