/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பேட்டரி பஸ் சார்ஜிங் ஸ்டேஷன் பணி ஆய்வு பேட்டரி பஸ் சார்ஜிங் ஸ்டேஷன் பணி ஆய்வு
பேட்டரி பஸ் சார்ஜிங் ஸ்டேஷன் பணி ஆய்வு
பேட்டரி பஸ் சார்ஜிங் ஸ்டேஷன் பணி ஆய்வு
பேட்டரி பஸ் சார்ஜிங் ஸ்டேஷன் பணி ஆய்வு
ADDED : ஜூன் 12, 2025 06:26 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் பேட்டரி பஸ்சுக்கு சார்ஜிங் ஸ்டேஷன் அமைக்கும் பணியினை பொதுப்பணித்துறை செயலர் முத்தம்மா ஆய்வு செய்தார்.
புதுச்சேரியில் பி.ஆர்.டி.சி., மூலம் 25 பேட்டரி பஸ்கள் வாங்கப்பட உள்ளது. இதில் முதற்கட்டமாக 5 பேட்டரி பஸ்கள் புதுச்சேரிக்கு வந்துள்ளது. இந்த பஸ்சிற்கு சார்ஜிங் ஸ்டேஷன் தாவரவியல் பூங்கா எதிரில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் அமைக்கப்பட்டு கட்டுமான பணி நடந்து வருகிறது.
இப்பணியினை பொதுப்பணித்தறை செயலர் முத்தம்மா ஆய்வு செய்தார். ஆய்வின்போது போக்குவரத்து ஆணையர் சிவக்குமார் உள்ளிட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.
ஆய்வுக்கு பிறகு அதிகாரிகள் கூறுகையில், 'புதுச்சேரியில் அடுத்த மாதம் நகரப்பகுதியில் பேட்டரி பஸ் இயக்கப்பட உள்ளது. இதற்காக சார்ஜிங் ஸ்டேஷன் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இப்பணிகளை விரைந்து முடிக்க வேணடும் என, பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தவிட்டுள்ளதாக' தெரிவித்தனர்.