/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வணிகர்கள் கூட்டமைப்பு வீரவணக்க ஊர்வலம் வணிகர்கள் கூட்டமைப்பு வீரவணக்க ஊர்வலம்
வணிகர்கள் கூட்டமைப்பு வீரவணக்க ஊர்வலம்
வணிகர்கள் கூட்டமைப்பு வீரவணக்க ஊர்வலம்
வணிகர்கள் கூட்டமைப்பு வீரவணக்க ஊர்வலம்
ADDED : மே 30, 2025 05:33 AM

புதுச்சேரி: புதுச்சேரி வணிகர்கள் கூட்டமைப்பு சார்பில் ஆப்பரேஷன் சிந்துார் வெற்றியை கொண்டாடும் வகையிலும், ராணுவ வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் விதமாக வீரவணக்க ஊர்வலம் நடந்தது.
காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக 'ஆபரேஷன் சிந்துார்' வெற்றி கரமாக நடத்திய ராணுவ வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில், வீரவணக்க ஊர்வலம் வணிகர்கள் கூட்டமைப்பு சார்பில் நேற்று நடந்தது.
புதுச்சேரி ஏ.எப்.டி., மைதானம் அருகே துவங்கிய வீரவணக்க ஊர்வலத்தை கவுரவத் தலைவர் சிவசங்கர் எம்.எல்,ஏ., தலைவர் பாபு சீனுவாசன் ஆகியோர் தலைமை தாங்கி துவக்கி வைத்தர். இதில், புதுச்சேரி வணிகர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள், வணிகர்கள், வியாபாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஊர்வலம், மறைமலையடிகள் சாலை, அண்ணா சாலை, நேரு வீதி, மிஷன் வீதி வழியாக சம்பா கோவில் அருகே முடிவடைந்தது.