/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/புதுச்சேரியில் நாளை மார்கழி மாத பஜனை நிறைவுபுதுச்சேரியில் நாளை மார்கழி மாத பஜனை நிறைவு
புதுச்சேரியில் நாளை மார்கழி மாத பஜனை நிறைவு
புதுச்சேரியில் நாளை மார்கழி மாத பஜனை நிறைவு
புதுச்சேரியில் நாளை மார்கழி மாத பஜனை நிறைவு
ADDED : ஜன 13, 2024 07:19 AM
புதுச்சேரி : புதுச்சேரி தர்ம சம்ரக்ஷண சமிதி, நமது பண்டைய வழக்கப்படி, மார்கழி மாதத்தில் அதிகாலை பஜனையை நடத்தி வருகிறது. கடந்த டிச. 17ம் தேதி மணக்குள விநாயகர் கோவிலில் பஜனை துவங்கியது.
லாஸ்பேட்டை விவேகானந்தா பள்ளி, மாதா அமிர்தானந்தமயி பள்ளி, இ.சி.ஆர். சங்கர வித்யாலயா பள்ளி, வாசவி பள்ளிகளில் 100க்கும் மேற்பட்ட பள்ளிச் சிறுவர் சிறுமியர் கலந்துகொண்டனர்.
மார்கழி 30 நாட்களும், 30 கோவில்களில் தினசரி 40, 50 பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு புதுச்சேரியின் நகர்ப்புறம் மட்டும் இன்றி பி.எஸ்.பாளையம், காட்டேரிக்குப்பம், வளவனுார் போன்ற கிராமப்புறங்களில் நாமசங்கீர்த்தனம் செய்யப்பட்டது.
இதன் நிறைவாக நாளை 14ம் தேதி காலை 5:30 மணிக்கு, புதுச்சேரி வரதராஜர் பெருமாள் கோவிலில் துவங்கி வேதபுரீஸ்வர் கோவில், ஈஸ்வரன் கோவில் வீதி, பாரதி வீதி வழியாக அண்ணா சாலை அடைந்து அங்கிருந்து மீண்டும் காந்தி வீதி வழியாக வரதராஜ பெருமாள் கோவிலில் காலை 8:30 மணிக்கு நிறைவு பெறுகிறது.
இந்நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் நாமச்சங்கீர்த்தனத்திலும், 20 குழந்தைகள் நாட்டியாஞ்சலியிலும் கலந்து கொள்கின்றனர்.நிறைவு விழாவில் பொதுமக்களும் கலந்து கொள்ளலாம் என தர்ம சம்ரக்ஷண சமிதி அமைப்பு தெரிவித்துள்ளது.