/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/புதுவை பஜார் என்ற இணையதள செயலி துவக்குவதற்கான 'லோகோ' வெளியீடுபுதுவை பஜார் என்ற இணையதள செயலி துவக்குவதற்கான 'லோகோ' வெளியீடு
புதுவை பஜார் என்ற இணையதள செயலி துவக்குவதற்கான 'லோகோ' வெளியீடு
புதுவை பஜார் என்ற இணையதள செயலி துவக்குவதற்கான 'லோகோ' வெளியீடு
புதுவை பஜார் என்ற இணையதள செயலி துவக்குவதற்கான 'லோகோ' வெளியீடு
ADDED : ஜன 04, 2024 03:22 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் வணிகர்கள் கூட்டமைப்பு மூலம் ரூ. 2 கோடி செலவில் புதுவை பஜார் என்ற இணையதள செயலி துவக்கப்பட உள்ளதால், அதற்கான லோகோ வெளியிடப்பட்டது.
புதுச்சேரியில் வணிகர்கள் கூட்டமைப்பு சார்பில், புதுவை பஜார் என்ற இணையதள செயலி துவக்கப்பட உள்ளது.
அதற்கான லோகோ வெளியீடு நிகழ்ச்சி அண்ணாமலை ஓட்டலில் நடந்தது. வணிகர்கள் கூட்டமைப்பின் சேர்மன் சிவசங்கர் முன்னிலை வகித்தார்.
தலைவர் பாபு, பொது செயலாளர் முருகபாண்டியன், பொருளாளர் தங்கமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, புதுவை பஜார் என்ற இணையதள செயலியின் லோகோ வெளியிடப்பட்டது.
இதுபற்றி, சேர்மன், தலைவர் கூறுகையில், 'இந்தியாவில் முதன் முறையாக மாநிலத்தில், புதுச்சேரி வணிகர்கள் கூட்டமைப்பு சார்பில், ரூ. 2 கோடி செலவில், புதுவை பஜார் என்ற இணையதள செயலி துவக்கப்பட உள்ளது.
அமேசான், பிளிப்கார்ட், ரிலையன்ஸ் போல இந்த செயலி இயங்கும். இந்த செயலி மூலம், 5 லட்சம் வர்த்தகர்கள் இணைந்து, புதுச்சேரியில், நேரடியாகவும், மறைமுகமாகவும் வர்த்தகம் பெருகும்.
இந்த செயலியை தொடங்குவதால், புதுச்சேரி மட்டும் இல்லாமல், வெளிநாடுகள் மற்றும் இந்தியாவில் இருந்து பல மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு, வணிகம், மருத்துவம், அவசர கால போலீஸ், சுற்றுலா இடங்கள், அரசு சட்டதிட்டங்கள் உள்ளிட்ட பல வகையில் பயன் தரும்.
பெரிய நிறுவனங்கள் தர முடியாத பொருட்களை இந்த செயலி மூலம் வழங்கப்படும். அதனால், வணிகர்களுக்கு பெரிய அளவில் வாழ்வாதரம் உயரும்' என்றார்.