/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/அ.தி.மு.க., பிரமுகர் மீது நிலம் ஆக்கிரமிப்பு வழக்குஅ.தி.மு.க., பிரமுகர் மீது நிலம் ஆக்கிரமிப்பு வழக்கு
அ.தி.மு.க., பிரமுகர் மீது நிலம் ஆக்கிரமிப்பு வழக்கு
அ.தி.மு.க., பிரமுகர் மீது நிலம் ஆக்கிரமிப்பு வழக்கு
அ.தி.மு.க., பிரமுகர் மீது நிலம் ஆக்கிரமிப்பு வழக்கு
ADDED : பிப் 25, 2024 05:15 AM
பாகூர் : நிலம் ஆக்கிரமிப்பு தொடர்பாக அ.தி.மு.க., பிரமுகர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கடலுார், செல்லாங்குப்பம் ராஜ முதலியார் சாவடியைச் சேர்ந்தவர் ரமேஷ் பிரபாகரன், 56; இவருக்கு சொந்தமான நிலம் புதுச்சேரி மாநிலம் பாகூரில் உள்ளது.
இந்த நிலத்திற்கு பக்கத் தில் உள்ள நிலத்தில் பாகூரை சேர்ந்த அ.தி.மு.க., பிரமுகர் மணவாளன் விவசாயம் செய்து வருகிறார். இவர்களுக்கு இடையே நிலத்தின் எல்லை தொடர்பாக பிரச்னை இருந்து வருகிறது.
இந்நிலையில், தனது நிலத்தின் ஒரு பகுதியை, மணவாளன் ஆக்கிரமித்து பயிர் செய்துள்ளதாகவும், அந்த நிலத்தை கிரயம் செய்து தரக்கூறி மிரட்டல் விடுப்பதாக ரமேஷ்பிரபாகரன், பாகூர் போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில், மணவாளன் மீது சப் இன்ஸ்பெக்டர் நந்தக்குமார் மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.