/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பஸ் நிலையத்தில் சிறுமியிடம் நகை திருட்டு பஸ் நிலையத்தில் சிறுமியிடம் நகை திருட்டு
பஸ் நிலையத்தில் சிறுமியிடம் நகை திருட்டு
பஸ் நிலையத்தில் சிறுமியிடம் நகை திருட்டு
பஸ் நிலையத்தில் சிறுமியிடம் நகை திருட்டு
ADDED : செப் 10, 2025 08:09 AM
புதுச்சேரி : புதிய பஸ் நிலையத்தில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி சிறுமியின் கழுத்தில் இருந்து ஒரு சவரன் செயினை திருடிய மர்ம நபர்கள் குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மரக்காணம் அடுத்த ஆலப்பாக்கம், இ.சி.ஆர்., மெயின் ரோட்டை சேர்ந்தவர் ராஜேஷ்குமார், விவசாய கூலி தொழிலாளி. இவரது மனைவி திவ்யா. இவர்களுக்கு தியா, 4; கிருத்திக் என இரு பிள்ளைகள் உள்ளனர்.
திவ்யா மற்றும் அவரது அக்கா தீபிகா ஆகியோர் தங்களது குழந்தைகளுடன், கடந்த 7ம் தேதி புதுச்சேரியில் உள்ள பிரபல துணிக்கடைக்கு வந்தார்.பின், மீண்டும் வீட்டிற்கு செல்ல டெம்போ மூலம் புதிய பஸ் நிலையம் சென்று, பஸ்சிற்காக காத்திருந்தனர்.
அங்கு, கூட்ட நெரிசல் அதிகமாக இருந்ததால், பஸ் ஏறும்போது திவ்யாவின் மகள் தியா திடீரென கத்தினார். திவ்யா அச்சமடைந்து கூட்டத்தில் இருந்து வெளியே வந்து தியாவை விசாரித்தபோது, அவரது கழுத்தில் இருந்த ஒரு சவரன் செயின் மற்றும் டாலர் மர்ம நபர்களால் திருடப்பட்டது தெரிய வந்தது.
இதுகுறித்து திவ்யா அளித்த புகாரின் பேரில், உருளையன்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.