/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ 'நீட்' அல்லாத இளநிலை படிப்புகளுக்கு 3ம் சுற்றுக்கு பாட விருப்பத்தை பதிய கெடு 'நீட்' அல்லாத இளநிலை படிப்புகளுக்கு 3ம் சுற்றுக்கு பாட விருப்பத்தை பதிய கெடு
'நீட்' அல்லாத இளநிலை படிப்புகளுக்கு 3ம் சுற்றுக்கு பாட விருப்பத்தை பதிய கெடு
'நீட்' அல்லாத இளநிலை படிப்புகளுக்கு 3ம் சுற்றுக்கு பாட விருப்பத்தை பதிய கெடு
'நீட்' அல்லாத இளநிலை படிப்புகளுக்கு 3ம் சுற்றுக்கு பாட விருப்பத்தை பதிய கெடு
ADDED : செப் 10, 2025 08:17 AM
புதுச்சேரி : 'நீட்' அல்லாத இளநிலை படிப்புகளில் காலியாக உள்ள இடங்களை 3வது சுற்று கலந்தாய்வு மூலம் நிரப்புவதற்கு, மாணவர்கள் தங்களது பாட விருப்பங்களை நாளை 11ம் தேதி காலை 11 மணிக்குள் பதிவு செய்யலாம்.
சென்டாக் ஒருங்கிணைப்பாளர் அமன் ஷர்மா விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
'நீட்' அல்லாத இளநிலை படிப்புகளான பி.டெக்., பி.எஸ்சி, விவசாயம், தோட்டக்கலை, பி,வி,எஸ்சி, (கால்நடை மருத்துவம்), பி.எஸ்சி., நர்சிங் உள்ளிட்ட இணை மருத்துவ படிப்புகள், கலை, அறிவியல், வணிகவியல் படிப்புகள் மற்றும் ராஷ்ட்ரிய ரக்ஷா பல்கலையில் உள்ள படிப்புகளில் காலியாக உள்ள இடங்களை 3ம் சுற்று கலந்தாய்வு மூலம் நிரப்ப மாணவர்கள் தங்களது டேஷ்போர்டு உள்நுழைவு சான்றுகளை பயன்படுத்தி, நாளை (11ம் தேதி) காலை 11:00 மணிக்குள் பாட விருப்பங்களை பதிந்தி அறிவுறுத்தப்படுகிறார்கள்.
புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலையில் பி.டெக்., படிப்பில் சுயநிதி இடங்கள் பிரிவில் உள்ள காலியிடங்கள் சென்டாக் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. சென்டாக்கில் ஜெ.இ.இ., மதிப்பெண் அடிப்படையில் விண்ணப்பித்த மாணவர்கள் தங்ளகது பாட விருப்பங்களை சமர்ப்பிக்கலாம்.
மூன்றாம் சுற்று கலந்தாய்வுக்கு, 2வது சுற்றில் சமர்ப்பிக்கப்பட்ட பாட விருப்பத் தேர்வுகள் செல்லாது. எனவே, 3வது சுற்றில் பங்கேற்க விரும்புபவர்கள், பாட விருப்பத் தேர்வுகளை புதிதாக சமர்ப்பிக்க வேண்டும்.
பாட விருப்பத் தேர்வுகளின் வரிசையை நிரப்புவதில் மாணவர்கள் உரிய கவனம் செலுத்த வேண்டும். பாடப்பிரிவு விருப்ப பட்டியல் காலியாக இருந்தால், சீட் ஒதுக்கப்படாது. முதல் மற்றும் 2வது சுற்று கலந்தாய்வு மூலம் சீட் ஒதுக்கப்பட்டு கல்லூரியில் சேர்ந்த மாணவர்களுக்கு 3வது சுற்றில் புதிய சீட் ஒதுக்கப்பட்டால் ஏற்கனவே ஒதுக்கப்பட்ட சீட் தானாகவே ரத்தாகி விடும்.
இதுதொடர்பாக அனைத்து மாணவர்களுக்கும் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு www.centacpuducherry.in என்ற சென்டாக் இணையதளத்தை பார்வையிடலாம். அல்லது 0413-2655570, 2655571 ஆகிய தொலைபேசி எண்களில் சென்டாக் உதவி மையத்தை தொடர்பு கொள்ளலாம்.