/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/மகரிஷி வித்யா மந்திர் பள்ளி திறப்பு விழாமகரிஷி வித்யா மந்திர் பள்ளி திறப்பு விழா
மகரிஷி வித்யா மந்திர் பள்ளி திறப்பு விழா
மகரிஷி வித்யா மந்திர் பள்ளி திறப்பு விழா
மகரிஷி வித்யா மந்திர் பள்ளி திறப்பு விழா
ADDED : ஜன 25, 2024 04:42 AM

புதுச்சேரி முருங்கப்பாக்கத்தில் மகரிஷி வித்யா மந்திர் சி.பி.எஸ்.இ., பள்ளியினை அமைச்சர் நமச்சிவாயம் திறந்து வைத்தார்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 46க்கும் மேற்பட்ட கிளைகளுடன் செயல்பட்டு வரும் சென்னையை தலைமை இடமாக கொண்டு செயல்படும் மகரிஷி வித்யா மந்திர் (சி.பி.எஸ்.இ., பள்ளி) புதுச்சேரி முள்ளோடையைத் தொடர்ந்து, தற்போது முருங்கப்பாக்கத்தில் கே.ஜி., வகுப்புகளுக்கு என்று பிரத்தியே கமாக மகரிஷி வித்யா மந்திர் பால பவன் கிளை திறப்பு விழா நடந்தது.
கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் குத்துவிளக்கு ஏற்றி, பள்ளியை திறந்துவைத்தார்.
நிகழ்ச்சியில், பாஸ்கர் எம்.எல்.ஏ., முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள், வியாபார பிரமுகர்கள், அரசியல் பிரமுகர்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பங்கேற்றனர்.
பள்ளி தலைவர் செல்வமணி, பள்ளி இயக்குனர் விக்னேஷ், தலைமை நிர்வாக அதிகாரி பிரேமா தீபக் மற்றும் அதிகாரிகள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
பள்ளியின் தலைவர் செல்வமணி கூறுகையில், 'இப்பள்ளி புதுச்சேரி நகரத்தின் மையப்பகுதியில் விசாலாமான காற்றோட்டத்துடன் எழில் மிகு தோற்றத்தில் அமைந்துள்ளது. பள்ளியில் குழந்தைகளை கவரும் வண்ணமையமான டிஜிட்டல் வகுப்பறைகள், மாணவ மாணவியர் விளையாடி மகிழ உள் மற்றும் வெளி விளையாட்டு பூங்கா நவீன வசதிகளுடன் அமைந்துள்ளது' என்றார்.