/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஐ.எப்.இ.டி., பொறியியல் கல்லுாரி ஆண்டு விழா ஐ.எப்.இ.டி., பொறியியல் கல்லுாரி ஆண்டு விழா
ஐ.எப்.இ.டி., பொறியியல் கல்லுாரி ஆண்டு விழா
ஐ.எப்.இ.டி., பொறியியல் கல்லுாரி ஆண்டு விழா
ஐ.எப்.இ.டி., பொறியியல் கல்லுாரி ஆண்டு விழா
ADDED : மே 25, 2025 04:46 AM

புதுச்சேரி : கெங்கராம்பாளையம், ஐ.எப்.இ.டி., பொறியியல் கல்லுாரியில் 26வது ஆண்டு விழா நடந்தது.
கல்லுாரியின் தலைவர் ராஜா தலைமை தாங்கினார். கல்லுாரியின் செயலாளர் சிவ்ராம் ஆல்வா வாழ்த்தி பேசினார்.
விழாவில், சிறப்பு விருந்தினராக நிகழ்ச்சி தொகுப்பாளரும், பேச்சாளருமான கோபிநாத் பங்கேற்று பேசுகையில், 'மாணவர்கள் பயன் பாட்டாளர்களாக அல்ல, உற்பத்தியாளர்களாக மாற வேணடும். வெற்றியடைய தங்களுடைய பலத்தை உணர வேண்டும். வாசிப்பு பழக்கம், தொடர்ச்சியான முயற்சி, படைப்பாற்றல் உணர்வு மற்றும் பொருள் புரிதல் ஆகியவை மாணவர்களின் தனிப்பட்ட மற்றும் தொழில் முறை வளர்ச்சிக்கு முக்கியமானது' என்றார்.
விழாவில், கல்லுாரியின் முதல்வர் மகேந்திரன், அகடெமிக்ஸ் டீன் கனிமொழி, பொருளாளர் விமல், அறக்காவலர்கள் முகமது இலியாஸ், சிந்த, தமீம் அன்சாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
ஏற்பாடுகளை பேராசிரியர்கள் வினோத், அருண்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.