ADDED : ஜூன் 15, 2025 11:54 PM
காரைக்கால் : காரைக்காலில் மனைவியிடையே ஏற்பட்ட பிரச்னையில், கணவர் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
காரைக்கால், நேரு நகர் விரிவாக்கம், மல்லிகை வீதியை சேர்ந்தவர் மணிகண்டன், 40; எலட்ரீஷியன். இவரது மனைவி யோகேஸ்வரி. இவர்களுக்கு 7 வயது மகன் அரசு பள்ளியில் படித்து வருகிறார். நேற்று முன்தினம் உறவினர் மகன் பிறந்த நாள் விழாவுக்கு மூவரும் சென்றுள்ளனர்.
பின், மகனை பள்ளிக்கு அழைத்து செல்ல வேண்டும் என, கூறியுள்ளார். இதனால் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் யோகேஸ்வரி கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு சென்றதால், மணிகண்டன் வீட்டில் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புகாரின் பேரில், நகர போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.