/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தகுதியானவர்களுக்கு வீடு ஒதுக்கீடு; முதல்வரிடம் அ.தி.மு.க., கோரிக்கை தகுதியானவர்களுக்கு வீடு ஒதுக்கீடு; முதல்வரிடம் அ.தி.மு.க., கோரிக்கை
தகுதியானவர்களுக்கு வீடு ஒதுக்கீடு; முதல்வரிடம் அ.தி.மு.க., கோரிக்கை
தகுதியானவர்களுக்கு வீடு ஒதுக்கீடு; முதல்வரிடம் அ.தி.மு.க., கோரிக்கை
தகுதியானவர்களுக்கு வீடு ஒதுக்கீடு; முதல்வரிடம் அ.தி.மு.க., கோரிக்கை
ADDED : ஜூன் 05, 2025 07:33 AM

புதுச்சேரி; வம்பாகீரப்பாளையம், திப்புராயப்பேட்டையில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளை தகுதியானவர்களுக்கு ஒதுக்கீடு செய்ய முதல்வர் ரங்கசாமியிடம், அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன் கோரிக்கை மனு அளித்துள்ளார்.
மனுவில் கூறியிருப்பதாவது:
உப்பளம் தொகுதி வம்பாகீரப்பாளையம், திப்புராயபேட்டையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், ரூ. 9.40 கோடி மதிப்பீட்டில் 80 குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. ஏழை மக்களுக்காக கட்டப்பட்ட அடுக்குமாடி வீடுகள், ஒரு கட்சியைச் சேர்ந்த ஆதரவாளர்களுக்கு ஒதுக்கப்படுவது சட்ட விரோத செயலாகும். கட்டி முடிக்கப்பட்ட வீடுகளை கலெக்டர் நேரடி பார்வையில் தகுதியான வீடற்ற மக்களுக்கு வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதில், தொகுதியைச் சேர்ந்த வீடற்ற ஏழைகளுக்கும், சாலை, கட்டடங்கள் மற்றும் ரயில்வே உள்ளிட்ட பணிகளுக்காக வீடுகளை காலி செய்து கொடுத்தவர்களுக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும்.
மேலும், அந்த வீடுகள் ஒதுக்கீடு செய்ய கலெக்டர் தலைமையில், தாசில்தார், குடிசை மாற்று வரிய அதிகாரிகள் கொண்ட குழுவினை அமைத்து, எவ்வித அரசியல் குறுக்கீடுகளும் இன்றி பயனாளிகளை நேர்மையாக தேர்ந்தெடுக்க முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.