ADDED : ஜூன் 05, 2025 07:32 AM

புதுச்சேரி; முதலியார்பேட்டை தொகுதி, உழந்தை கீரப்பாளையம், ரமணர்நகரின் உட்புற வீதிகளுக்கு வாய்க்கால் வசதி ஏற்படுத்த அசோக் பாபு எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.16.33 லட்சம் நிதி ஒதுக்கிடு செய்தார்.
இப்பணியை அசோக் பாபு எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். நகராட்சி பொறியாளர் சிவபாலன், துணை பொறியாளர் வெங்கடாஜலபதி, உதவி பொறியாளர் ரமேஷ் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் ரமணர் நகர் மற்றும் சிவா விஷ்ணு நகர் குடியிருப்போர் பொதுநல சங்க கவுரவ தலைவர் ராதாகிருஷ்ணன், தலைவர் ராமச்சந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.