/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மழைக்கால நோயை தடுக்க சுகாதாரத்துறை ஆலோசனை மழைக்கால நோயை தடுக்க சுகாதாரத்துறை ஆலோசனை
மழைக்கால நோயை தடுக்க சுகாதாரத்துறை ஆலோசனை
மழைக்கால நோயை தடுக்க சுகாதாரத்துறை ஆலோசனை
மழைக்கால நோயை தடுக்க சுகாதாரத்துறை ஆலோசனை
ADDED : செப் 20, 2025 11:51 PM
புதுச்சேரி : சுற்றுப்புறத்தை சுகாதாரமாக வைத்திருந்தால் வடகிழக்கு பருவமழை காலங்களில் பரவக்கூடிய நோய்களை தவிர்க்கலாம் என சுகாதாரத்துறை இயக்குநர் செவ்வேள் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத் துள்ள செய்திக்குறிப்பு:
டெங்கு காய்ச்சல் உருவாக்கும் 'ஏடிஸ்' வகை கொசு பகல் நேரத்தில் கடிப்பதால் அலுவலகம் மற்றும் பள்ளிகளுக்கு செல்பவர்கள் கொசு கடிக்காத வண்ணம் பாதுகாப்பாக இருப்பது அவசியம். மேலும் ஜன்னல்களில் வலைகள், கொசு விரட்டி, மூலிகை கொசு விரட்டிகளை பயன்படுத்தி கொசு வராமல் தடுக்கலாம். டெங்கு நோய் உருவாக்கும் கொசுக்கள் மனிதர்களால் உருவாக்கப்பட்ட தண்ணீர் தேங்கும் பொருட்களை அப்புறப்படுத்தும் நிகழ்வு மூலமாகவும், வாரம் ஒரு முறை வீடுகளை சுத்தப்படுத்தி உலர்தினம் கடைப்பிடிப்பதன் மூலம் கொசு புழுவின் வளர்ச்சியை தடுத்து, டெங்கு பரவலை தடுக்க முடியும்.
மேலும், 'சுத்தமான கைகள், சுத்தமான குடிநீர், சுத்தமான உணவு, சுத்தமான சுற்றுப்புறம்' என்பதில் மக்கள் கவனம் செலுத்தினால், வடகிழக்கு பருவமழை காலத்தில் பரவக்கூடிய நோய்களில் இருந்து தற்காத்து கொள்ளலாம்.
மேலும், மழைக்காலங்களில் ஏற்படும் நோய்களுக்கான சிகிச்சைக்கு தேவைப்படும் மருந்துகள், அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. மருத்துவ குழுவும் தயார் நிலையில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.