வங்கியாளர் குழுமம் சிறப்பு முகாம்
வங்கியாளர் குழுமம் சிறப்பு முகாம்
வங்கியாளர் குழுமம் சிறப்பு முகாம்
ADDED : செப் 20, 2025 11:54 PM

புதுச்சேரி : இந்திய நிதி சேவைகள் துறை, இந்திய ரிசர்வ் வங்கி சார்பில் ஊரக நிதி உள்ளடக்கத்தை வலுப்படுத்தும் நோக்கில் மாநில அளவிலான வங்கியாளர் குழுமம் சிறப்பு முகாம் நடந்தது.
இந்திய நிதி சேவைகள் துறை மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி சார்பில், ஊரக நிலைகளில் நிதி உள்ளடக் கத்தை வலுப்படுத்தும் நோக்கில், கடந்த ஜூலை 1 முதல் வரும் 30ம் தேதி வரை மூன்று மாத நிதி உள்ளடக்கம் முழுமை அடைவதற்கான பிரசாரத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது.
அதன் ஒருபகுதியாக, மாநில அளவிலான வங்கியாளர் குழுமம், கிருமாம்பாக்கம் மற்றும் பாகூர் கிராம பஞ்சாயத்துகளில் சிறப்பு முகாம் நடந்தது.
இந்திய ரிசர்வ் வங்கியின், சென்னை மண்டல இயக்குநர் உமா சங்கர் தலைமை தாங்கி பேசுகையில், பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா, பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா, பிரதான் மந்திரி சுரக் ஷா பீமா யோஜனா மற்றும் அடல் பென்ஷன் யோஜனா போன்ற முக்கிய நிதி நலத் திட்டங்கள் குறித்தும், கணக்குகளுக்கான வாரிசு நியமனம், உரிமை கோரா வைப்புத் தொகைகள், டிஜிட்டல் மோசடி, வங்கி புகார் தீர்வு முறைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார்.
உதவி பொது மேலாளர் தர்மராஜ், மாநில அளவிலான வங்கியாளர் குழுமம் ஒருங்கிணைப்பாளர் வெங்கட சுப்ரமணியன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சதீஷ்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.