/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சித்தானந்த சுவாமி கோவிலில் நாளை குரு பூஜை விழா சித்தானந்த சுவாமி கோவிலில் நாளை குரு பூஜை விழா
சித்தானந்த சுவாமி கோவிலில் நாளை குரு பூஜை விழா
சித்தானந்த சுவாமி கோவிலில் நாளை குரு பூஜை விழா
சித்தானந்த சுவாமி கோவிலில் நாளை குரு பூஜை விழா
ADDED : மே 28, 2025 12:48 AM
புதுச்சேரி : கருவடிக்குப்பம் குரு சித்தானந்த சுவாமிக்கு 188 வது குரு பூஜை விழா நாளை நடக்கிறது.
இதனை முன்னிட்டு இன்று (28ம் தேதி) காலை 6:00 மணிக்கு கலச பிரதிஷ்டை, கணபதி ேஹாமம் நடக்கிறது. 8:00 மணிக்கு பூர்ணாஹூதி தீபாராதனை நடக்கிறது.
நாளை (29ம் தேதி) காலை 5:50 மணிக்கு கணபதி ேஹாமம், நவக்கிர ேஹாமம், ருத்ர ஜபம், காலை 7:00 மணிக்கு சுவாமிக்கு மகா அபிேஷகம் நடக்கிறது. 9:00 மணிக்கு பூர்ணாஹூதி, கலசம் புறப்பாடு, 10:00 மணிக்கு சுவாமிக்கு கலசாபிேஷகம், சிறப்பு அலங்காரம் மகா தீபாரதனை நடக்கிறது. காலை 11:00 மணிக்கு 7,500 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவதை கவர்னர் கைலாசநாதன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் துவக்கி வைக்கின்றனர். எம்.எல்.ஏ.,க்கள் ஜான்குமார், கல்யாணசுந்தரம் ஆகியோர் பங்கேற்கின்றனர். ஹிந்து அறநிலையத்துறை ஆணையர் சிவசங்கரன் முன்னிலை வகிக்கிறார்.
மாலை 6:00 மணிக்கு தீபாரதனை, இரவு 10:00 மணிக்கு ஆர்த்த ஜாமபூஜை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத் தலைவர் இளங்கோவன், துணைத் தலைவர் சசிக்குமார், செயலாளர் மதிவாணன், பொருளாளர் கதிரேசன், உறுப்பினர் அருள் ஆகியோர் செய்து வருகின்றனர். குரு பூஜைக்கான ஏற்பாடுகளை தேவஸ்தான குருக்கள் தேவசோனாதிபதி, தேவஸ்தான ஊழியர்கள் செய்து வருகின்றனர். குரு பூஜைக்கு நன்கொடை அளிப்பவர்கள் தேவஸ்தானத்தில் கொடுத்து ரசீது பெற்றுக்கொள்ளலாம்.
மேலும் மகா அபிேஷகத்திற்கு பால், பழம், தேன், விபூதி, சந்தனம், கொடுக்க விரும்புவோர் நாளை (29ம் தேதி) காலை 7:00 மணிக்குள் தேவஸ்தானத்தில் கொடுக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.