/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஜிப்மர் செவிலியர் வீட்டில் 5 சவரன் நகை திருட்டு ஜிப்மர் செவிலியர் வீட்டில் 5 சவரன் நகை திருட்டு
ஜிப்மர் செவிலியர் வீட்டில் 5 சவரன் நகை திருட்டு
ஜிப்மர் செவிலியர் வீட்டில் 5 சவரன் நகை திருட்டு
ஜிப்மர் செவிலியர் வீட்டில் 5 சவரன் நகை திருட்டு
ADDED : மே 27, 2025 11:34 PM
புதுச்சேரி; முதலியார்பேட்டை, ராஜா நகரை சேர்ந்தவர் சிவகுரு, 36; விவசாயி. இவரது மனைவி கலைச்செல்வி ஜிப்மரில் செவிலியர் பணி செய்து வருகிறார். சிவகுரு நேற்று முன்தினம் தனது மனைவியை வேலைக்காக ஜிப்மருக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது, சிவகுரு வீட்டில் இருந்து மர்ம நபர் ஒருவர் வெளியே வந்துள்ளார்.
இதைபார்த்த சிவகுருவின் தந்தை கணேசன், அவரிடம் யார் என கேட்டபோது, சிவகுருவின் நண்பர் என கூறியபடி, அங்கிருந்து பைக்கில் தப்பி சென்றார். இதுகுறித்து தகவலறிந்த சிவகுரு வீட்டிற்கு வந்து பார்த்தபோது, முன்பக்க கதவு திறக்கப்பட்டு, உள்ளே பீரோவில் இருந்த 5 சவரன் தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்கள் திருடப்பட்டிருந்தது.
சிவகுரு அளித்த புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து நகைகளை திருடி சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.