/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கஞ்சா கடத்தல்; 2 பேர் கைது கோரிமேடு போலீசார் அதிரடி கஞ்சா கடத்தல்; 2 பேர் கைது கோரிமேடு போலீசார் அதிரடி
கஞ்சா கடத்தல்; 2 பேர் கைது கோரிமேடு போலீசார் அதிரடி
கஞ்சா கடத்தல்; 2 பேர் கைது கோரிமேடு போலீசார் அதிரடி
கஞ்சா கடத்தல்; 2 பேர் கைது கோரிமேடு போலீசார் அதிரடி
ADDED : மே 23, 2025 11:57 PM

புதுச்சேரி: பாக்கமுடையான்பேட் பகுதியில் பைக்கில் கஞ்சா கடத்தி வந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.
கோரிமேடு இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு காமராஜ் சாலை, பாக்கமுடையான்பேட் சந்திப்பு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அவ்வழியாக பைக்கில் வந்த 2 வாலிபர்கள் போலீசாரை கண்டதும் அதிவேகமாக சென்றனர். அவர்களில் ஒருவரை மடக்கி பிடித்த போலீசார், சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தபோது, ரூ. 1 லட்சம் மதிப்பிலான 800 கிராம் கஞ்சா பொட்டலங்கள் மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது.
விசாரணையில், தொண்டமாநத்தம், ஜீவா காம்பிளசை சேர்ந்த கருணாநிதி மகன் ஜான்பீட்டர், 26; என்பதும், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவர் அளித்த தகவலின்பேரில், கஞ்சா சப்ளை செய்த துத்திப்பட்டு, கல்லறை வீதியை சேர்ந்த குறளரசன், 28; என்பவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 800 கிராம் கஞ்சா பொட்டலங்கள், ஒரு பைக், 2 மொபைல் போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். மேலும் தப்பியோடிய ராமநாதப்புரத்தை சேர்ந்த மதன்குமார் என்பரை போலீசார் தேடி வருகின்றனர்.