Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச நீட் பயிற்சி வகுப்பு

அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச நீட் பயிற்சி வகுப்பு

அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச நீட் பயிற்சி வகுப்பு

அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச நீட் பயிற்சி வகுப்பு

ADDED : மார் 20, 2025 04:48 AM


Google News
புதுச்சேரி: புதுச்சேரி வாசவி அகாடமி சார்பில், அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச 'நீட்' தேர்வு பயிற்சி வகுப்பு வரும் 28ம் தேதி துவங்குகிறது.

முத்தியால்பேட்டையில் இயங்கி வரும் வாசவி அகாடமி சார்பில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான (கிரஷ் கோர்ஸ் ) இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது. இப்பயிற்சி வரும் 28ம் தேதி துவங்குகிறது. 35 நாட்கள் நடத்தப்படும் பயிற்சியில், தேவையான புத்தகங்கள், குறிப்புகள், கையேடுகள் அனைத்தும் இலவசமாக வழங்கப்படும்.

பயிற்சியில் பங்கு பெற அரசு பள்ளி மாணவர்களுக்கு பொது நுழைவுத் தேர்வு வரும் 26ம் தேதி, நடக்கிறது. இதில், இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடங்களில் இருந்து தலா 45 வினாக்கள் வீதம் மொத்தம் 180 வினாக்களுக்கு ஓ.எம்.ஆர்., மதிப்பீட்டு முறையில் மதிப்பிடப்படும்.

மதிப்பெண்களின் தரவரிசை அடிப்படையில் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு நீட் தேர்வு பயிற்சி வகுப்பில் அனுமதிக்கப்படுவர்.

பயிற்சி வகுப்பில் சேர்வதற்கான விண்ணப்பப் படிவத்தை https://forms.office.com/r/1MEm9Kj4GU Iink மூலம் பதிவு செய்து, அரசு பள்ளி மாணவ, மாணவிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

மேலும், விபரங்களுக்கு 95000 84267 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளவும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us