ADDED : பிப் 06, 2024 05:39 AM

வில்லியனுார் : முன்னாள் சேர்மன் பாலமுருகன் பிறந்தநாள் விழா முதல்வர் நேரில் வாழ்த்து தெரிவித்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
முன்னாள் சேர்மன் பாலமுருகன் பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடினார். விழாவில் முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம், எம்.எல்.ஏ.,க்கள் ஆறுமுகம், ரமேஷ், ராமலிங்கம், முன்னாள் சபாநாயகர் சபாபதி, முன்னாள் அமைச்சர் தியாகராஜன், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் சுகுமார், கோபிகா, மோகித் கன்ஷ்டரக்சன் ரவிக்குமார், பாலகிருஷ்ணன், அன்பு, கணபதி, ரமேஷ், வாசன், அருள்முத்து, கதிரேசன், சதீஷ், ராமச்சந்திரன், நிலவணிக சங்க தலைவர் பழனிசாமி, அம்மன் ஸ்டோர் மோகன்தாஸ், மங்கலம் தொகுதி சங்கர், செல்வம், நடராஜன், ஆறுமுகம், அர்சுனன், சுதாகர், சபரி, என்.ஆர்., காங் நிர்வாகிகள் இலக்கிய பேரவை தனசேகரன் உள்ளிட்ட பலர் நேரில் வாழ்த்தினார்.
பிறந்தநாளை முன்னிட்டு ஆதராவாளர்கள் பைபாஸ் எம்.ஜி.ஆர்., சிலை பகுதியில் உள்ள விநாயகர் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு ஊர்வலமாக திருக்காஞ்சி கோவிலுக்கு சென்று வழிபட்டனர். அதனை தொடர்ந்து வில்லியனுார் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகம் பகுதியில் அமைக்கப்பட்ட மேடையில் ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானத்தை முதல்வர், அமைச்சர் முன்னிலையில் வழங்கினர்.