Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/தந்தை மாயம் மகன் புகார்

தந்தை மாயம் மகன் புகார்

தந்தை மாயம் மகன் புகார்

தந்தை மாயம் மகன் புகார்

ADDED : ஜன 02, 2024 05:46 AM


Google News
Latest Tamil News
திருக்கனுார், : திருக்கனுார் அடுத்துள்ள சோம்பட்டு பீமாராவ் நகரைச் சேர்ந்தவர் முத்துராமன், 55; சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். இவர் கடந்த 25ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவர், மீண்டும் இதுவரையில் திரும்பவில்லை.

உறவினர்கள் வீடுகளில் தேடியும் முத்துராமன் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது மகன் தமிழ்மணி அளித்த புகாரின் பேரில், திருக்கனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இவரை பற்றி தகவல் தெரிந்தவர்கள் போலீஸ் ஸ்டேஷன் 0413-2688435 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow Us