/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ எஸ்.பி., அலுவலகத்தில் கண் சிகிச்சை முகாம் எஸ்.பி., அலுவலகத்தில் கண் சிகிச்சை முகாம்
எஸ்.பி., அலுவலகத்தில் கண் சிகிச்சை முகாம்
எஸ்.பி., அலுவலகத்தில் கண் சிகிச்சை முகாம்
எஸ்.பி., அலுவலகத்தில் கண் சிகிச்சை முகாம்
ADDED : செப் 20, 2025 11:49 PM

அரியாங்குப்பம் : வல்லபாய் பட்டேல் பிறந்த நாளையொட்டி, அரியாங்குப்பம் எஸ்.பி., அலுவலகத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.
அரியாங்குப்பம் போலீசார் மற்றும் தவளக்குப்பம் அரவிந்த் கண் மருத்துவ மனை இணைந்து, எஸ்.பி., அலுவலகத்தில் இலவச கண் சிகிச்சை முகாமை நடத்தின. சீனியர் எஸ்.பி., கலைவாணன் முகாமை துவக்கி வைத்தார்.
எஸ்.பி.,க்கள், செல்வம் , பக்தவச்சலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரவிந்த் கண் மருத்துவமனை மக்கள் தொடர்பு அதிகாரி காவேரி, இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், சப் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் உட்பட போலீசார் கலந்து கொண்டனர்.
முகாமில் கலந்து கொண்ட, போலீசார், பொதுமக்கள், ஆட்டோ டிரைவர்களுக்கு, டாக்டர் ருச்சா கண் பரிசோதனை செய்து ஆலோசனை வழங்கினார்.