/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/கண் கலங்கிய எம்.எல்.ஏ., அரசு விழாவில் நெகிழ்ச்சிகண் கலங்கிய எம்.எல்.ஏ., அரசு விழாவில் நெகிழ்ச்சி
கண் கலங்கிய எம்.எல்.ஏ., அரசு விழாவில் நெகிழ்ச்சி
கண் கலங்கிய எம்.எல்.ஏ., அரசு விழாவில் நெகிழ்ச்சி
கண் கலங்கிய எம்.எல்.ஏ., அரசு விழாவில் நெகிழ்ச்சி
ADDED : பிப் 11, 2024 02:16 AM
அரசு பள்ளியில் மாணவியருக்கு இலவச லேப்டாப் வழங்கும்போது, உணர்ச்சிவசப்பட்டு எம்.எல்.ஏ., கண் கலங்கியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
முத்தியால்பேட்டை தொகுதியில் உள்ள சின்னாத்தா அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இலவச லேப்டாப் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. சிறப்பு விருந்தினராக, அந்த தொகுதியின் எம்.எல்.ஏ., பிரகாஷ்குமார் பங்கேற்றார்.
ஆரம்பம் முதலே சற்று உணர்ச்சிவசப்பட்ட மனநிலையில் காணப்பட்ட பிரகாஷ்குமார் பேசும்போது, 'கடந்த முறை முதல்வர் இந்த பள்ளிக்கு வந்து மாணவியருக்கு லேப்டாப் வழங்கினார். அப்போது இந்த மேடையில் ஏற, எனக்கு அனுமதி கிடைக்கவில்லை. நான் மேடையின் கீழே, துாரமாக ஒரு ஓரத்தில் நின்று கொண்டிருந்தேன். இப்போது, உங்களுக்கு என் கையால் லேப்டாப் வழங்குவது பெருமைக்குரிய விஷயம்' என்று உருக்கமாக பேசிக்கொண்டிருக்கும்போது, திடீரென அழுது விட்டார்.
தொடர்ந்து பள்ளி மாணவியருக்கு லேப்டாப் வழங்கும்போதும், கலங்கிய கண்களுடனே வழங்கினார். இது, ஆசிரியர்கள் மற்றும் மாணவியரிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.