ADDED : செப் 08, 2025 02:41 AM

புதுச்சேரி: பிரதமர் மோடியின் 76வது பிறந்த நாளை முன்னிட்டு, ராஜ்யசபா எம்.பி., செல்வகணபதி ஏற்பாட்டில் ஜோதி கண் மருத்துவமனை மூலம் இலவச கண் பரிசோதனை முகாம் பெத்துசெட்டிபேட்டை, திருமுருகன் திருமண நிலையத்தில் நடந்தது.
லாசுபேட்டை தொகுதி பா.ஜ., அனைத்து நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். முகாமில் ஜோதி கண் மருத்துவமனையின் மருத்துவ குழுவினர் பங்கேற்று, 200க்கும் மேற்பட்டவர்களுக்கு இலவசமாக கண் பரிசோதனை செய்யப்பட்டது.
பரிசோதனை செய்து கொண்ட அனைவரும் வரும் 17ம் தேதி பிரதமர் மோடி பிறந்த நாள் விழாவில், கண் கண்ணாடிகள் இலவசமாக வழங்கப் படுகிறது.