/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/மின்னணு ஓட்டுப்பதிவு செயல்முறை விளக்கம்மின்னணு ஓட்டுப்பதிவு செயல்முறை விளக்கம்
மின்னணு ஓட்டுப்பதிவு செயல்முறை விளக்கம்
மின்னணு ஓட்டுப்பதிவு செயல்முறை விளக்கம்
மின்னணு ஓட்டுப்பதிவு செயல்முறை விளக்கம்
ADDED : ஜன 31, 2024 12:10 AM

புதுச்சேரி : காமராஜ் நகர் தொகுதியில் நடந்த மாதிரி வாக்குச்சாவடி, மின்னணு ஓட்டுப்பதிவு செயல்முறை விளக்கத்தை உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் பார்வையிட்டார்.
லோக்சபா தேர்தலை முன்னிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, புதுச்சேரி தேர்தல் துறையின் மாதிரி வாக்குச்சாவடி அமைக்கப்பட்ட வாகனம் மூலம் ஒவ்வொரு தொகுதியிலும், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தின் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது.
அதன் ஒருபகுதியாக காமராஜ் நகர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மாதிரி வாக்குச்சாவடி வாகன விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. காமராஜர் மணிமண்டபம் அருகே நடந்த நிகழ்ச்சியில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் செயல்முறை விளக்கத்தை உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் பார்வையிட்டு, பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
கல்லுாரி மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.