ADDED : ஜூன் 14, 2025 01:07 AM
அரியாங்குப்பம் : அரியாங்குப்பம் காய்கறி மார்க்கெட் வீதியில், ஆக்கிரமிப்புகளை, கொம்யூன் அதிகாரிகள் அதிரடியாக அகற்றினர்.
அரியாங்குப்பம் மார்க்கெட்டி வீதியில் ஆக்கிரமிப்புகள் காரணமாக, காய்கறிகள் வாங்க வரும் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல் கூட்ட நெரிசல் ஏற்பட்டு தினமும் அவதியடைந்து வருகின்றனர்.
இதுகுறித்து பொதுமக்களிடம் இருந்து அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்திற்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.
அதனை அடுத்து கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகள் நேற்று மார்கெட் வீதியில் இருந்த ஆக்கிரமிப்புகளை அதிரடியாக அகற்றினர்.
மக்கள் செல்லும் பாதையில் ஆக்கிரமிப்பு செய்பவர்கள் மீது, நடவடிக்கை எடுக்கப்படும் என, அதிகாரிகள் எச்சரித்தனர்.