/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஏம்பலம் தொகுதி இந்திய கம்யூ., கூட்டம் ஏம்பலம் தொகுதி இந்திய கம்யூ., கூட்டம்
ஏம்பலம் தொகுதி இந்திய கம்யூ., கூட்டம்
ஏம்பலம் தொகுதி இந்திய கம்யூ., கூட்டம்
ஏம்பலம் தொகுதி இந்திய கம்யூ., கூட்டம்
ADDED : ஜூன் 02, 2025 10:48 PM
பாகூரி : இந்திய கம்யூ., ஏம்பலம் தொகுதி குழு கூட்டம் குடியிருப்புபாளையம் கிராமத்தில் நடந்தது.
கூட்டத்திற்கு, மாசிலாமணி தலைமை தாங்கினார். தொகுதி செயலாளர் பெருமாள், நடைபெற்ற வேலைகள் குறித்து பேசினார்.
பாகூர் தொகுதி செயலாளரும் மாநிலக் குழு உறுப்பினருமான ஆறுமுகம், கட்சியின் செயல்பாடுகள் குறித்தும் அமைப்பு நிலை குறித்தும் விளக்க உரையாற்றினார். தொகுதி குழு உறுப்பினர்கள் பக்தவச்சலம், சுமதி, பாலாஜி, கிருஷ்ணமூர்த்தி முருகன், கோர்க்காடு ஆறுமுகம், இந்திய மாதர் தேசிய சம்மேளன புதுச்சேரி மாநில துணைத் தலைவர் ஆனந்தவல்லி ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், ஏம்பலம் தொகுதி குடியிருப்புபாளையம் சுப்பையா நகர், கிருமாம்பாக்கம், சேலியமேடு, கரிக்கலாம்பாக்கம், ஏம்பலம் ஆகிய கிளைகளில் உள்ள உறுப்பினர்களை வரும் பத்தாம் தேதிக்குள் இறுதிப்படுத்துவது, கோர்க்காட்டில் புதியதாக கிளை உருவாக்குவது, கட்சி கிளை மாநாடுகள் ஜூன் மாதம் 30ம் தேதிக்குள் நடத்தி முடிப்பது, ஏம்பலம் தொகுதி குழு மாநாடு ஜூலை மாதத்தில் நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டது.
முன்னதாக, மறைந்த திரைப்பட நடிகர் முற்போக்கு சிந்தனைவாதி ராஜேஷ்க்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.