/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வரியில்லா பட்ஜெட் என கூறி பல வரிகளை விதிக்கும் முதல்வர் தி.மு.க., சம்பத் குற்றச்சாட்டு வரியில்லா பட்ஜெட் என கூறி பல வரிகளை விதிக்கும் முதல்வர் தி.மு.க., சம்பத் குற்றச்சாட்டு
வரியில்லா பட்ஜெட் என கூறி பல வரிகளை விதிக்கும் முதல்வர் தி.மு.க., சம்பத் குற்றச்சாட்டு
வரியில்லா பட்ஜெட் என கூறி பல வரிகளை விதிக்கும் முதல்வர் தி.மு.க., சம்பத் குற்றச்சாட்டு
வரியில்லா பட்ஜெட் என கூறி பல வரிகளை விதிக்கும் முதல்வர் தி.மு.க., சம்பத் குற்றச்சாட்டு
ADDED : ஜூன் 02, 2025 10:49 PM
புதுச்சேரி,: வரியில்லா பட்ஜெட் என அறிவித்து விட்டு, முதல்வர் ரங்கசாமி, தினசரி வரிகளை ஏற்றி வருவதாக சம்பத் எம்.எல்.ஏ., குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதம் நடந்த கூட்டத்தொடரில், முதல்வர் ரங்கசாமி வரி விதிப்பில் எந்த மாற்றமும் செய்யாமல் பட்ஜெட் தாக்கல் செய்தார்.
மேலும், பல்வேறு நலத்திட்டத்தை அறிவித்தார். அந்த அறிவிப்புகளை நிறைவேற்ற நிதி உள்ளதா என கேள்வி எழுப்பியபோது, மக்களுக்கு எந்தவித வரிச்சுமையும் ஏற்படுத்தாமல், அறிவிப்பை செயல்படுத்துவோம் என்றார்.
ஆனால், பட்ஜெட் தாக்கல் முடிந்து 60 நாட்களுக்குள் மின் கட்டணம், பஸ் கட்டணம், பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டது.தற்போது, மதுபான விலை, சொத்து வாங்குபவருக்கு அரசு வழிகாட்டி மதிப்பு 15 முதல் 50 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.
பட்ஜெட் தாக்கலில் வரியில்லா பட்ஜெட் என கூறிய முதல்வர், தற்போது வரிகளை உயர்த்தி மக்களை வஞ்சித்து வருகிறார். இப்படி, வரிகளை உயர்த்தாமல்,கேபிள் டி.வி.,யை, அரசுடைமை ஆக்கி மாதந்தோறும் பல கோடி ரூபாய் வருமானம் பெற்றிருக்கலாம்.
இதற்கிடையே, ரங்கசாமி மீண்டும் முதல்வராக வரக்கூடாது என்பதற்காக வெளிமாநில லாட்டரி அதிபரை கொண்டு வந்து அரசியல் செய்யும் ஜான்குமார் எம்.எல்.ஏ.,வுக்கு முதல்வர் சலுகை காட்டுவது மர்மமாகவே உள்ளது.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.