/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/'கர்ம வினையால் நாம் பிறவிக்கடலில் விழுகிறோம்' ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ர தாதம் உபன்யாசம்'கர்ம வினையால் நாம் பிறவிக்கடலில் விழுகிறோம்' ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ர தாதம் உபன்யாசம்
'கர்ம வினையால் நாம் பிறவிக்கடலில் விழுகிறோம்' ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ர தாதம் உபன்யாசம்
'கர்ம வினையால் நாம் பிறவிக்கடலில் விழுகிறோம்' ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ர தாதம் உபன்யாசம்
'கர்ம வினையால் நாம் பிறவிக்கடலில் விழுகிறோம்' ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ர தாதம் உபன்யாசம்
ADDED : ஜன 10, 2024 11:04 PM
புதுச்சேரி: முத்தியால்பேட்டை, ராமகிருஷ்ணா நகர் லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் மார்கழி மாதத்தையொட்டி, ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி ராமபத்ர தாதம் திருப்பாவையின் 25ம் பாசுரம் குறித்து நேற்று அவர் செய்த உபன்யாசம்:
தனக்கென்று இல்லாமல் கிருஷ்ணாவதாரத்தில் மற்றவருக்கு உழைத்து, தன்னைச் சரணடைந்தவர்களை காத்தான் கண்ணன் என்பதை இந்த பாசுரம் உணர்த்துகிறது. நாம் எல்லாரும் கர்ம வினையால் பிறவிக்கடலில் விழுகிறோம். அவன் நம்மைத் துாக்க நம்மைப்போல் வந்து பிறந்து நம் துயர் போக்குகிறான்.
ஜீவாத்மாக்களாகிய நாம் அவரவர் கர்மபலன் காரணமாகப் பிறப்பெடுக்கின்றோம். பரமனோ, தன் பரம அடியவர்களைக் காக்கவும், அவர்களைத் தன்னுடன் சேர்த்துக் கொள்ளவும் கண்ணனாகப் பிறந்தான்.
இங்கு ராமாவதாரத்தையும் கிருஷ்ணாவதாரத்தையும் ஒப்பிட்டுப் பார்ப்போம். தசரதன் புத்ர காமேஷ்டி யாகம் செய்து, தவப் பயனால் நான்கு பிள்ளைகளைப் பெற்றான். ஆனால் வசுதேவன், தேவகி, நந்தகோபன், யசோதை ஆகிய நான்கு பேர் தவம் செய்து ஒரு பிள்ளையைப் பெற்றார்கள்.
பகவத் கீதையில் தர்மத்திற்கு குறைவு ஏற்படும் காலத்தில் தான் அவதரிக்கிறேன் என்றருளியுள்ளான் கண்ணன். ஆகவே, அவதரிக்கும் காலம் குறிப்பிட்டுச் சொல்லும் வண்ணம் உள்ளது. அதனால் தான் ஆண்டாளும் இந்தப் பாசுரத்தில், கண்ணன் அவதரித்த காலத்தை ஓரிரவு என்று குறிப்பிட்டுச் சொல்கிறாள்.
அதர்மம் என்ற இரவுக்கு வெளிச்சமாகி அதர்ம இருளை விரட்ட, இருளில் வந்து சூரியனைப் போன்று, ஆயர் குலத்தில் தோன்றும் மணிவிளக்காக, அணிவிளக்காக பிறந்தான் கண்ணன்.
கண்ணன் பிறப்பு பற்றி கம்சன் அறிந்து கண்ணனுக்கு தீங்கு வரக்கூடாது என்று அவன் பிறந்த நட்சத்திரத்தை அத்தத்தின் பத்தா நாள் தோன்றிய அச்சுதன் என்று மறைமுகமாக தன் தகப்பனார் சொன்னதை நினைத்து, ஆண்டாளும், தன் திருத்தகப்பனார் பாணியிலேயே ஒருத்தி மகனாய் பிறந்து ஒருத்தி மகனாய் ஒளித்து வளர என்று அருளியுள்ளாள்.
இவ்வாறு அவர் உபன்யாசம் செய்தார்.