ADDED : செப் 15, 2025 02:02 AM

புதுச்சேரி: அகில பாரத இந்து மகா சபா சார்பில், போதை ஒழிப்பு விழிப்புணர்வு பைக் ஊர்வலம் நடந்தது.
கிழக்கு எஸ்.பி., ஸ்ருதி கொடியசைத்துதொடங்கி வைத்தார். மணக்குள விநாயகர் கோவிலில் துவங்கிய ஊர்வலம்,நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று கன்னியக்கோவிலில் நிறைவடைந்தது.
போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து இளைஞர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஊர்வலத்தில், புதுச்சேரி அகில பாரத இந்து மகா சபாவின் தலைவர் மணிவண்ணன், பொதுச்செயலாளர் பெருமாள், மாநில செயலாளர் மோகன், செயற்குழு உறுப்பினர் வைத்திலிங்கம், துணை ஒருங்கிணைப்பாளர் அடிகளார் மகா சபா முருகேசன், துணைச் செயலாளர் நீலகண்டன், துணை பொதுசெயலாளர் எழிலன், துணை ஒருங்கிணைப்பாளர் பாலசந்தர், ஊடகத்துறை துணைத் தலைவர் சந்துரு, இளைஞர் அணி துணைத் தலைவர் ஆனந்த் குமார் கலந்து கொண்டனர்.