/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தேசிய பாதுகாப்பு அகாடமி தேர்வு 2 மையங்களில் 210 பேர் பங்கேற்பு தேசிய பாதுகாப்பு அகாடமி தேர்வு 2 மையங்களில் 210 பேர் பங்கேற்பு
தேசிய பாதுகாப்பு அகாடமி தேர்வு 2 மையங்களில் 210 பேர் பங்கேற்பு
தேசிய பாதுகாப்பு அகாடமி தேர்வு 2 மையங்களில் 210 பேர் பங்கேற்பு
தேசிய பாதுகாப்பு அகாடமி தேர்வு 2 மையங்களில் 210 பேர் பங்கேற்பு
ADDED : செப் 15, 2025 02:01 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் நடந்த ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகள் தேர்வு, தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் கடற்படை அகாடமி தேர்வு இரண்டு மையங்களில் நடந்தது. இதில் 210 பேர் பங்கேற்றனர்.
மத்திய பணியாளர் தேர்வாணையம் சார்பில், 2024ம் ஆண்டிற்கான ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகள் தேர்வு, தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் கடற்படை அகாடமி தேர்வுகள் நாடு முழுதும் நேற்று நடந்தது.
புதுச்சேரியில் இரண்டு மையங்களில் தேர்வுகள் நடந்தது.
பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லுாரி மையத்தில் ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகள் தேர்வு நடந்தது. இத்தேர்வு எழுத 116 பேர் விண்ணப்பித்திருந்தனர். 70 பேர் தேர்வு எழுதினர். 46 பேர் ஆப்சென்ட்.
லாஸ்பேட்டை வள்ளலார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் கடற்படை அகாடமி தேர்வு நடந்தது. இத்தேர்வு எழுத 187 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 140 பேர் பங்கேற்றனர். 47 பேர் ஆப்சென்ட். இரு இடங்களிலும் 210 பேர் தேர்வு எழுதினர்.
தேர்வு மையங்களில் யு.பி.எஸ்.சி., தேர்வு ஒருங்கிணைப்பாளர் ஜெந்த் குமார் ரே, தேர்வு ஆய்வு அதிகாரி தீக் ஷித், பார்வையாளராக ஜி.எஸ்.டி., இணை ஆணையர் ராம்மோகன் ஆகியோர் தேர்வு மையங்களில் ஆய்வு செய்தனர்.
முன்னதாக தேர்வு அறைக்கு செல்லும் முன், தேர்வர்கள் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்யப்பட்டு, ஹால்டிக்கெட், அடையாள அட்டை ஆகியவற்றை சரி பார்த்து அனுமதிக்கப்பட்டனர்.
மொபைல் போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் தடை விதிக்கப்பட்டிருந்தது. தேர்வையொட்டி, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்து. தேர்வு மையங்களுக்கு அரசு சார்பில், சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.