/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/கரிக்கலாம்பாக்கம் அரசு பள்ளியில் போதை விழிப்புணர்வு நிறைவு விழாகரிக்கலாம்பாக்கம் அரசு பள்ளியில் போதை விழிப்புணர்வு நிறைவு விழா
கரிக்கலாம்பாக்கம் அரசு பள்ளியில் போதை விழிப்புணர்வு நிறைவு விழா
கரிக்கலாம்பாக்கம் அரசு பள்ளியில் போதை விழிப்புணர்வு நிறைவு விழா
கரிக்கலாம்பாக்கம் அரசு பள்ளியில் போதை விழிப்புணர்வு நிறைவு விழா
ADDED : பிப் 06, 2024 04:08 AM

நெட்டப்பாக்கம் : கரிக்கலாம்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிறைவு மற்றும் பரிசளிப்பு விழா நடந்தது.
பள்ளி துணை முதல்வர் சித்ரா தலைமை தாங்கினார். தலைமையாசிரியர் குணசெல்வி வரவேற்றார். பொறுப்பாசிரியர் ஸ்ரீதரன் நோக்கவுரையாற்றினார்.
சிறப்பு அழைப்பாளராக கரிக்கலாம்பாக்கம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் இளமருது கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி, போதை பழக்கம் ஒரு வழி பாதை என்றும், அதில் மாணவர்கள் தங்களை பழக்கப்படுத்திக் கொள்ளக் கூடாது என்றார் தொடர்ந்து மாணவர்களின் போதை ஒழிப்பு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
ஏற்பாடுகளை திட்ட ஒருங்கிணைப்பாளர் நான்சி ஏஞ்சலின் செய்திருந்தார்.
நூலக ஆசிரியர் கருணானந்தன் நன்றி கூறினார்.