Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/அரசு ஐ.டி.ஐ.யில் ட்ரோன் டெக்னீஷியன் புதிய தொழிற் பயிற்சி துவக்கம்

அரசு ஐ.டி.ஐ.யில் ட்ரோன் டெக்னீஷியன் புதிய தொழிற் பயிற்சி துவக்கம்

அரசு ஐ.டி.ஐ.யில் ட்ரோன் டெக்னீஷியன் புதிய தொழிற் பயிற்சி துவக்கம்

அரசு ஐ.டி.ஐ.யில் ட்ரோன் டெக்னீஷியன் புதிய தொழிற் பயிற்சி துவக்கம்

ADDED : ஜன 10, 2024 02:02 AM


Google News
புதுச்சேரி : புதுச்சேரி மேட்டுப்பாளையத்தில் அரசு ஐ.டி.ஐ., உள்ளது. அங்கு ட்ரோன் டெக்னீஷியன் புதிய தொழில் பயிற்சி பிரிவு துவக்கப்பட்டுள்ளது.

பயிற்சியில் சேருவதற்கான விண்ணப்பங்கள்ஐ.டி.ஐ.,யில் வழங்கப் பட்டு வருகிறது. பூர்த்தி செய்தவிண்ணப்பங்கள்பெற கடைசி நாள்வரும் 22ம் தேதி.இந்த தொழிற் பயிற்சிக்கு 10ம்வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.

6 மாதபயிற்சியில், கண்காணிப்பு, நில அளவை, விவசாய இடுபொருள் தெளிப்பு, புகைப்படம் எடுத்தல், மற்றும் படப்பிடிப்பு, ட்ரோன் உபகரணங்களை ஒன்றிணைத்தல், பழுதுபார்த்தல், பராமரித்தல் உள்ளிட்டவை பயிற்சி அளிக்கப்படுகிறது.

மேலும், புதுச்சேரி டெக்னாலஜிக்கல் யூனிவர்சிட்டியின் ஒரு அங்கமான அட்டல் இங்குபேஷன் சென்டர் உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டு, தொழில்நுட்ப பரிவர்த்தனைகள் செய்து கொள்வதன் மூலம் பயிற்சியின் தரநிலையை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் விபரங்களுக்கு வேலை நாட்களில் 98943 80176 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us