Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/25 வங்கி கணக்குகள், ரூ.1.கோடி, 3.5 கிலோ தங்கம்: ஐ.ஆர்.எஸ். அதிகாரியின் மலைக்க வைக்கும் சொத்து

25 வங்கி கணக்குகள், ரூ.1.கோடி, 3.5 கிலோ தங்கம்: ஐ.ஆர்.எஸ். அதிகாரியின் மலைக்க வைக்கும் சொத்து

25 வங்கி கணக்குகள், ரூ.1.கோடி, 3.5 கிலோ தங்கம்: ஐ.ஆர்.எஸ். அதிகாரியின் மலைக்க வைக்கும் சொத்து

25 வங்கி கணக்குகள், ரூ.1.கோடி, 3.5 கிலோ தங்கம்: ஐ.ஆர்.எஸ். அதிகாரியின் மலைக்க வைக்கும் சொத்து

Latest Tamil News
புதுடில்லி: ரூ.25 லட்சம் லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்ட ஐ.ஆர்.எஸ்., அதிகாரி வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.1 கோடி, 3.5 கிலோ தங்கம், 2 கிலோ வெள்ளி பொருட்கள் சிக்கியது.

புதுடில்லியில் உள்ள வரிசெலுத்துவோர் சேவைகள் இயக்குநரகத்தின் கூடுதல் இயக்குநர் ஜெனரலாக இருப்பவர் அமித்குமார் சிங்கால். மூத்த வருவாய் சேவை அதிகாரியான இவர், ரூ.25 லட்சம் லஞ்சம் பெற்றதாக டில்லியில் வசந்த்குஞ்ச் பகுதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார்.

அதே நேரத்தில் லஞ்சம் கேட்டதாக எழுந்த புகாரின் பேரில் சி.பி.ஐ., அதிகாரிகள், ஹர்ஷ் கோட்டக் என்ற நபரை கைது செய்தனர். அவர் மொஹாலியில் உள்ள அமித்குமார் சிங்கால் இல்லத்தில் அவருக்கு பதிலாக லஞ்ச பணத்தை வாங்கிய போது சிக்கினார்.

2007ம் ஆண்டு பேட்ச் மூத்த ஐ.ஆர்.எஸ்., அதிகாரியான அமித்குமார் சிங்கால் கைது செய்யப்பட்டதை அடுத்து டில்லி, மும்பை, பஞ்சாப் உள்ளிட்ட பல நகரங்களில் சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தினர். அவரின் இல்லங்களில் சோதனையில் இறங்கினர்.

சோதனையின் முடிவில் ரூ.1 கோடி, 3.5 கிலோ தங்கம், 2 கிலோ வெள்ளி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து சி.பி.ஐ., அதிகாரிகள் கூறியதாவது:

அமித்குமார் சிங்காலுக்கு டில்லி, பஞ்சாப், மும்பை ஆகிய நகரங்களில் ஏராளமான சொத்துகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. பல்வேறு வங்கிகளில் 25 கணக்குகள் இருப்பது தெரிய வந்துள்ளது. அவருக்குச் சொந்தமான அசையும் மற்றும் அசையா சொத்துகளின் மதிப்பீடு நடந்து வருகிறது.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us