/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கோவிந்தசாலை, சக்தி நகர்களில் சுத்திகரித்த குடிநீர் கேன் வழங்கல் கோவிந்தசாலை, சக்தி நகர்களில் சுத்திகரித்த குடிநீர் கேன் வழங்கல்
கோவிந்தசாலை, சக்தி நகர்களில் சுத்திகரித்த குடிநீர் கேன் வழங்கல்
கோவிந்தசாலை, சக்தி நகர்களில் சுத்திகரித்த குடிநீர் கேன் வழங்கல்
கோவிந்தசாலை, சக்தி நகர்களில் சுத்திகரித்த குடிநீர் கேன் வழங்கல்
ADDED : செப் 11, 2025 03:06 AM

புதுச்சேரி: தற்காலிகமாக குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்ட கோவிந்த சாலை மற்றும் சக்தி நகர் பகுதிகளில் பொதுப் பணித்துறை பொது சுகாதார பிரிவு சார்பில், குடிநீர் கேன்கள் வழங்கப்பட்டன.
உருளையன்பேட்டை மற்றும் நெல்லித்தோப்பு தொகுதிகளில் கழிவு நீர் கலந்த குடிநீர் குடித்து வயிற்று போக்கால் பாதிக்கப்பட்டு 3 பேர் இறந்தனர். 70 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து இவ்விரு தொகுதிகளுக்கும் முத்தரையர் பாளையத்திலிருந்து குடிநீர் வரும் குழாய்களில் பொதுப்பணித்துறையினர் நேற்று முன்தினம் முதல் ஆய்வு செய்து வருகின்றனர்.
இதற்காக இரு தொகுதிகளிலும், குடிநீர் வினியோகம் முற்றிலுமாக நிறுத்தப்பட்டு, நேற்று முன்தினம் டேங்கர் மூலம் குடிநீர் வழங்கப்பட்டது.
இந்நிலையில் அமைச்சர் லட்சுமிநாராயணன் அறிவித்தபடி, கோவிந்த சாலை, அந்தோணியார் கோவில் வீதி, பாரதிபுரம், காமராஜர் வீதி, பகத்சிங் வீதி மற்றும் சக்தி நகர்களில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் 20 லிட்டர் கேன் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டது.
முத்திரையார்பாளையம் குடிநீர் குழாயில் நடைபெறும் சோதனை முடிவு வரும் வரை, குடிநீர் கேன்கள் வழங்கப்படும் என, பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.