/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/இன்று ஓட்டு எண்ணிக்கைக்கு விரிவான... ஏற்பாடு; அரசியல் கட்சியினரின் மனநிலை திக்..திக்..இன்று ஓட்டு எண்ணிக்கைக்கு விரிவான... ஏற்பாடு; அரசியல் கட்சியினரின் மனநிலை திக்..திக்..
இன்று ஓட்டு எண்ணிக்கைக்கு விரிவான... ஏற்பாடு; அரசியல் கட்சியினரின் மனநிலை திக்..திக்..
இன்று ஓட்டு எண்ணிக்கைக்கு விரிவான... ஏற்பாடு; அரசியல் கட்சியினரின் மனநிலை திக்..திக்..
இன்று ஓட்டு எண்ணிக்கைக்கு விரிவான... ஏற்பாடு; அரசியல் கட்சியினரின் மனநிலை திக்..திக்..
ADDED : ஜூன் 04, 2024 04:40 AM

புதுச்சேரி : பரபரப்பான சூழ்நிலையில், புதுச்சேரி லோக்சபா தேர்தலுக்கான ஓட்டு பதிவு இன்று காலை 8 மணிக்கு நான்கு பிராந்தியங்களிலும் துவங்குகிறது. ஒவ்வொரு சுற்றிலும் 105 டேபிள் போடப்பட்டு ஓட்டுக்கள் எண்ணப்படுகிறது. அரசியல் கட்சிகள் திக் திக் மன நிலையில் ரிசல்ட்டை எதிர்நோக்கியுள்ளனர்.
இந்தியாவில் லோக்சபா தேர்தல் ஏழு கட்டமாக நடந்தது. புதுச்சேரி லோக்சபா தொகுதிக்கு கடந்த ஏப்ரல் 19ம் தேதி ஓட்டு பதிவு நடந்தது. மொத்தமுள்ள 10,23,699 வாக்காளர்களில் 80,4277 பேர் ஓட்டுபோட்டனர். மொத்தம் 78.57 சதவீத பேர் ஓட்டளித்து இருந்தனர்.
தொடர்ந்து, புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் பகுதிகளில் உள்ள ஓட்டு மையங்களுக்கு மின்னணு ஓட்டு பதிவு இயந்திரங்கள் கொண்டு சென்று வைக்கப்பட்டது. இன்று 4ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கின்றது.
புதுச்சேரி பிராந்தியத்தில் 23 தொகுதிகளில் பதிவான ஓட்டுகள் லாஸ்பேட்டை அரசு மகளிர் பொறியியல் கல்லுாரி மோதிலால் நேரு பாலிடெக்னிக் ஆகிய 2 இடங்களில் நடக்கிறது.
காரைக்காலில் அறிஞர் அண்ணா கலை அறிவியல் கல்லுாரியிலும், மாகியில் ஜவகர்லால் நேரு அரசு மேல்நிலைப்பள்ளியிலும், ஏனாம் எஸ்.ஆர்.கே., கலை அறிவியல் கல்லுாரியிலும் ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது.
காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை துவங்குகிறது. முன்னதாக அதிகாலை 6.30 மணிக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையிலிருந்து முகவர்கள் முன்னிலையில் வெளியே கொண்டு வரப்பட்டு, ஓட்டு எண்ணிக்கைகான மேசைகளில் கொண்டு வைக்கப்பட உள்ளது.
ஓட்டு எண்ணிக்கை மையங்களுக்கு வரும் முகவர்கள் அடையாள அட்டையுடன் வர வேண்டும். அடையாள அட்டை இல்லாதவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அறிவுறுத்தப்பட் டுள்ளது.
ஓட்டு எண்ணிக்கை மையங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஓட்டு எண்ணிக்கை வீடியோ கேமரா மூலம் பதிவு செய்யப்பட உள்ளது. ஒவ்வொரு சுற்றிலும் 105 டேபிள் போடப்பட்டு ஓட்டுக்கள் எண்ணப்படுகிறது.
புதுச்சேரியில் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு தலா மூன்று தொகுதிகள் வீதம் ஒதுக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக ஒவ்வொரு உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியும் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மூன்று தொகுதிகளில் முதல் தொகுதியில் பதிவான ஓட்டுகளை எண்ணுவார்கள்.
பிறகு இரண்டாவது, மூன்றவாது தொகுதிக்கான ஓட்டுகள் எண்ணப்படும்.
முதல் சுற்று
இதன்படி ஓட்டு எண்ணிக்கை முதல் சுற்றில், ஆரம்பிக்கப்பட்டதும். புதுச்சேரியில் மண்ணாடிப்பட்டு, மங்கலம், கதிர்காமம், காமராஜ் நகர், முத்தியால்பேட்டை, உருளையன்பேட்டை, அரியாங்குப்பம், ஏம்பலம், நெடுங்காடு, காரைக்கால் வடக்கு மற்றும் மாகி, ஏனாம் என 12 தொகுதி ஓட்டுகள் எண்ணப்படும்.
இரண்டாம் சுற்றில், திருபுவனை, வில்லியனூர், இந்திராநகர், ராஜ்பவன், லாஸ்பேட்டை, நெல்லித்தோப்பு, மணவெளி, நெட்டப்பாக்கம், திருநள்ளாறு, காரைக்கால் தெற்கு ஆகிய 10 தொகுதிகளின் ஓட்டுகள் எண்ணப்படும்.
மூன்றாம் சுற்றில் ஊசுடு, உழவர்கரை, தட்டாஞ்சாவடி, காலாப்பட்டு, உப்பளம், முதலியார்பேட்டை, பாகூர், நிரவி ஆகிய 8 தொகுதிகளின் ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
புதுச்சேரி தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பதை கணிக்க முடியாமல் உள்ளது. பா.ஜ., - காங்., இடையே இழுபறி நிலைமை புதுச்சேரியில் நிலவுகிறது, இதனால் இரு கட்சி வேட்பாளர்களும் குழப்பத்தில் உள்ளனர்.
எங்கள் கட்சி தான் வெற்றி பெறும் என்று ஒருவருக்கொருவர் கூறி வருகின்றனர். வேட்பாளர்களும் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து வந்திருகின்றனர்.
இதனால் கொண்டாட்டத்துக்கு இரு கட்சியினருமே தயாராகி வருகின்றனர். பட்டாசுகளை ரெடியாக வாங்கி வைத்துள்ளனர்.
திக் திக் மனநிலையில் பரப்பரப்புடன் ரிசல்ட்டை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.