/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மின்சாரம் தாக்கி ஊழியர் முகம் கருகியது மின்சாரம் தாக்கி ஊழியர் முகம் கருகியது
மின்சாரம் தாக்கி ஊழியர் முகம் கருகியது
மின்சாரம் தாக்கி ஊழியர் முகம் கருகியது
மின்சாரம் தாக்கி ஊழியர் முகம் கருகியது
ADDED : ஜூன் 04, 2024 04:49 AM

புதுச்சேரி, : புதுச்சேரியில் மின்தடை சரிசெய்யும் பணியின்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் ஊழியர் முகம் கருகியது.
புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் அதிக மின் நுகர்வு காரணமாக ஆங்காங்கே டிரான்ஸ்பார்மரில் பழுது ஏற்பட்டு மின்தடை ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் இரவு வீசிய காற்று காரணமாக பல இடங்களில் மின்தடை ஏற்பட்டது.
மேட்டுப்பாளையத்தில் உள்ள அப்பார்மெண்ட் ஒன்றில் நேற்று முன்தினம் இரவு மின்தடை ஏற்பட்டது. முத்திரைப்பாளையம் இயக்குதல் மற்றும் பராமரிப்பு அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றும் திருக்கனுார் சந்திரன், 54; தரை தளத்தில் பொருத்தப்பட்டு இருந்த மின்சார பெட்டியில் மின்தடை சரிசெய்யும் பணியில் ஈடுப்பட்டார்.
அப்போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி சந்திரன் முகம் மற்றும் கைகள் எரிந்தது.
உடனடியாக முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை அனுமதித்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுபோல் கடந்த 4 நாட்களுக்கு முன்பு வில்லியனுார் மணவெளியைச் சேர்ந்த சுப்ராயன், 40; சோனியா காந்தி நகரில் ஏற்பட்ட மின்தடையை சரிசெய்தபோது, மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்தார்.
கதிர்காமம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுப்ராயன் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.