Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ஜிப்மரில் சிகிச்சையில் இருந்த குழந்தை இறப்பு; உறவினர்கள் மறியலால் பரபரப்பு

ஜிப்மரில் சிகிச்சையில் இருந்த குழந்தை இறப்பு; உறவினர்கள் மறியலால் பரபரப்பு

ஜிப்மரில் சிகிச்சையில் இருந்த குழந்தை இறப்பு; உறவினர்கள் மறியலால் பரபரப்பு

ஜிப்மரில் சிகிச்சையில் இருந்த குழந்தை இறப்பு; உறவினர்கள் மறியலால் பரபரப்பு

ADDED : பிப் 24, 2024 06:45 AM


Google News
Latest Tamil News
புதுச்சேரி : ஜிப்மரில் டாக்டரின் அலட்சியத்தால் ஒரு வயது குழந்தை இறந்ததாக கூறி, உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

புதுச்சேரி, நெட்டப்பாக்கத்தை சேர்ந்தவர் தியாகு. மருந்து கம்பெனி ஊழியர். இவரது ஒரு வயது பெண் குழந்தை ஷாசிகா உடல்நிலை சரியில்லாததால் ஜிப்மரில் தொடர் சிகிச்சை பெற்று வந்தார்.

அதன் தொடர்ச்சியாக கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி சிகிச்சைக்காக ஜிப்மருக்கு அழைத்து வரப்பட்ட குழந்தைக்கு எம்.ஆர்.ஐ., ஸ்கேன் எடுக்க மருந்து செலுத்தப்பட்டது. அடுத்த சில நிமிடத்தில் குழந்தையின் உடல் நிலை மோசமானது. உடன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

அப்போது குழந்தையின் உடல்நிலையை பார்த்து ஆத்திரமடைந்த தியாகுவின் உறவினர் சென்னையை சேர்ந்த ராம், பணியில் இருந்த டாக்டரை தாக்கினார். இதுகுறித்த புகாரின் பேரில் ராம் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், கடந்த 6 மாதங்களாக ஜிப்மரில் தீவிர சிகிச்சை பிரிவில் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த குழந்தை ஷாசிகா நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி இறந்தது.

குழந்தையின் இறப்பிற்கு டாக்டர்களின் அலட்சியமே காரணம் எனக்கூறி, குழந்தையின் உறவினர்கள் நேற்று காலை 11:00 மணிக்கு ஜிப்மர் வாசலில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக தமிழக வாழ்வுரிமை கட்சியினர் கலந்து கொண்டனர்.

அவர்களிடம் ஜிப்மர் டாக்டர்கள், குழந்தைக்கு அளித்த சிகிச்சை குறித்து விசாரிக்கப்படும். தவறு நடந்திருந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

அதனை ஏற்க மறுத்த குழந்தையின் உறவினர்கள், குழந்தையின் உடற்கூறாய்வை தமிழக மருத்துவமனையில் நடத்த வேண்டும்.

டாக்டர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனக் கூறி, குழந்தையின் உடலை வாங்க மறுத்தனர்.

இது தொடர்பாக கலெக்டரை சந்தித்து மனு அளித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us