/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக தம்பதியிடம் ரூ. 4 லட்சம் மோசடி வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக தம்பதியிடம் ரூ. 4 லட்சம் மோசடி
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக தம்பதியிடம் ரூ. 4 லட்சம் மோசடி
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக தம்பதியிடம் ரூ. 4 லட்சம் மோசடி
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக தம்பதியிடம் ரூ. 4 லட்சம் மோசடி
ADDED : செப் 16, 2025 12:09 AM
புதுச்சேரி: வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி டாக்டர் தம்பதியிடம் ரூ.4 லட்சம் மோசடி செய்த இருவரை போலீசார் தேடிவருகின்றனர்.
பெரிய காலாப்பட்டு, சிங்காரவேலர் வீதியை சேர்ந்தவர் மஞ்சினி,46; தனியார் மருத்துவமனையில் ரேடியாலஜி துறையிலும்,அவரது மனைவி மயக்கவியல் டாக்டராகவும் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் மஞ்சினிக்கு, பொம்மையார்பாளையம் சங்கர் என்பவர் மூலம், கவுண்டன்பாளையம் சோமசுந்தரம், சுப்ரமணி அறிமுகாகினர். இருவரும், பிரான்ஸ் நாட்டில் பலருக்கு வேலை வாங்கி கொடுத்துள்ளதாக கூறினர். அதனை நம்பிய மஞ்சினி, தனது மனைவிக்கு வெளிநாட்டில் வேலை வாங்கி தருமாறு கேட்டார். அதற்கு இருவரும் ரூ. 7.75 லட்சம் செலவாகும் என்றனர்.
அதனை நம்பி, மஞ்சினி அவரது மனைவியும் கடந்த 2018 ம் ஆண்டு சோமசுந்தரம் மற்றும் சுப்ரமணியிடம் ரூ.4 லட்சம் கொடுத்தனர். ஒரு வாரம் கழித்து, மஞ்சினியை தொடர்பு கொண்ட சோமசுந்தரம், வேலைக்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்து விட்டதாகவம், விமான டிக்கெட் பதிவு செய்ய மீதமுள்ள தொகையை கேட்டனர். உடன் மஞ்சினி, மீதிமுள்ள ரூ.3.75 லட்சம் பணத்தை கொடுத்தார். அதன்பிறகு மஞ்சினி, இருவரையும் தொடர்பு கொண்டு வேலை பற்றி கேட்டபோது சரியான பதில் அளிக்காமல், காலம் கடத்தினர்.
விசாரணையில், இருவரும் இதேபோன்று வெளிநாட்டில் வேலைக்கு அனுப்புவதாக கூறி பலரிடம் மோசடி செய்து வருவது தெரியவந்தது.
அதிர்ச்சியடைந்த மஞ்சினி, தான் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதற்கு ரூ.3.75 லட்சத்தை மட்டும் கொடுத்தனர். மீதி ரூ.4 லட்சத்தை திரும்ப கேட்டபோது, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து மஞ்சினி அளித்த புகாரின் பேரில் டி நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.