/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ திருபுவனை அருகே தனியார் கம்பெனியில் ரூ.4 லட்சம் மதிப்புடைய காப்பர் திருட்டு திருபுவனை அருகே தனியார் கம்பெனியில் ரூ.4 லட்சம் மதிப்புடைய காப்பர் திருட்டு
திருபுவனை அருகே தனியார் கம்பெனியில் ரூ.4 லட்சம் மதிப்புடைய காப்பர் திருட்டு
திருபுவனை அருகே தனியார் கம்பெனியில் ரூ.4 லட்சம் மதிப்புடைய காப்பர் திருட்டு
திருபுவனை அருகே தனியார் கம்பெனியில் ரூ.4 லட்சம் மதிப்புடைய காப்பர் திருட்டு
ADDED : மே 26, 2025 04:39 AM

திருபுவனை : புதுச்சேரி திருபுவனை அடுத்த சன்னியாசிக்குப்பத்தில் உள்ள பிரபல தனியார் நிறுவனத்தில் ரூ.4 லட்சம் மதிப்புடைய 225 கிலோ காப்பர் பொருட்களை திருடிய வழக்கில் 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருபுவனை அடுத்த சன்னியாசிக்குப்பத்தில் உள்ள பிரபல தனியார் நிறுவனம் உள்ளது. கடந்த 2024 ஆண்டு ஆக.15ம் தேதி மர்ம ஆசாமிகள் கம்பெனிக்குள் புகுந்து அங்கிருந்த சி.சி.டி.வி., கண்காணிப்பு கேமராக்களை உடைத்து, தலா 25 கிலோ எடை கொண்ட 12 பிளாஸ்டிக் கேன்களில் இருந்த 225 கிலோ எடைகொண்ட காப்பார் பொருட்களை திருடிச்சென்றனர்.இது குறித்து கம்பெனியில் மனிதவள மேலாளர் ஹரிஹரன் கொடுத்த புகாரின்பேரில் திருபுவனை போலீசார் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் திருபுவனை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கதிரேசன் தலைமையில் போலீசார் கலிதீர்த்தாள்குப்பம்-ஆண்டியார்பாளையம் சாலை நான்குமுனை சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவழியே வந்த டி.என் 12 ஏ.எம் 5524 பதிவு எண் கொண்ட டோஸ்ட் வண்டியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் டிரைவர் உள்பட 3 பேர் இருந்தனர். வண்டியில் பிளாஸ்டிக் கேனில் 25 கிலோ எடைகொண்ட காப்பர் பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கு எந்த ஆவணமும் இல்லை.
விசாரணையில் அவர்கள் திருபுவனைபாளையம் தன்ராஜ் நகரை சேர்ந்த உசேன் மகன் மன்சூர் அலிகான் 34; என்பதும், அதில் பயணம் செய்தவர்கள் கரியமாணிக்கம் பழைய காலனி வெள்ளிக்கண்ணு மகன் தினகரன் 30; அதே பகுதியை சேர்ந்த திருமலை மகன் திவன் 20; என்பதும் காப்பர் பவுடரை கடந்த 2024ம் ஆண்டு ஆக.15ம் தேதி சன்னியாசிக்குப்பம் தனியார் கம்பெனியில் திருடியதையும் ஒப்புக்கொண்டனர்.
மேலும் இதில் தொடர்புடைய கம்பெனியில் லோடு மேன்கள் ராம்பாக்கத்தை சேர்ந்த கபாலி 30; அதே பகுதியை சேர்ந்த அங்காளன் 20; மற்றும் வில்லியனுாரை சேர்ந்த பழைய இரும்பு வியபாரி பாபு (எ) சுலைமான் 55; ஆகிய மொத்தம் 6 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து ரூ.2.49 லட்சம் ரொக்கம், திருட்டுக்கு பயன்படுத்திய வண்டி மற்றும் ஒரு மொபைல் போன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து 6 பேரையும் புதுச்சேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறயைில் அடைத்தனர்.