/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கலெக்டர் அலுவலகத்தில் கலந்தாய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் கலந்தாய்வு கூட்டம்
கலெக்டர் அலுவலகத்தில் கலந்தாய்வு கூட்டம்
கலெக்டர் அலுவலகத்தில் கலந்தாய்வு கூட்டம்
கலெக்டர் அலுவலகத்தில் கலந்தாய்வு கூட்டம்
ADDED : மே 28, 2025 11:48 PM
புதுச்சேரி: குளங்கள் அமைப்பது தொடர்பாக, கலெடர் அலுவலகத்தில் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
மத்திய அரசின் ஊரக வளர்ச்சி நிறுவனத்தின் சார்பில், அமரித் சரோவர் என்ற திட்டம் கடந்த 2022ம் ஆண்டு துவக்கப்பட்டது. குளங்கள் அமைப்பது, நீர் பற்றாக்குறையை போக்குவது, நிலத்தடி நீரை மேம்படுத்துவது போன்றவை இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
இந்த திட்டத்தின் 2ம் கட்ட கலந்தாய்வு கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் குலோத்துங்கன் தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில், குளங்களை தேர்ந்தெடுப்பதற்கான செயல் திட்டம் மற்றும் வழிமுறைகள் குறித்து கலெக்டர் விளக்கம் அளித்தார்.