ADDED : மே 28, 2025 11:48 PM

புதுச்சேரி: ரத்த தானம், ஆரோக்கியமான வாழ்வு குறித்து விழிப்புணர்வு சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ள பிரசன்ஜித் தாஸ், நேற்று புதுச்சேரி வந்தடைந்தார்.
மேற்கு வங்காளம், முர்ஷிதாபாத்தில் உள்ள லால்கோலாவைச் சேர்ந்தவர் பிரசன்ஜித் தாஸ். இவர் ரத்த தானம், காடு வளர்ப்பு, அமைதி, நிலையான மற்றும் ஆரோக்கியமான வாழ்வு ஆகியவை குறித்து இளைஞர்களிடம் விழிப்புணர்வு ஏற்படும் வகையில், இந்தியாவில் உள்ள 20 மாநிலங்கள், 6 யூனியன் பிரதேசங்களில் சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளார்.
கடந்த ஜனவரி 4ம் தேதி சைக்கிள் பயணத்தை துவங்கிய பிரசன்ஜித் தாஸ், மேற்கு வங்கம், ஜார்கண்ட், ஒடிசா, ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.
அவர், நேற்று புதுச்சேரி வந்தடைந்தார். பிரசன்ஜித் தாஸ், இன்று முழுதும் சைக்கிளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளார்.