Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பாகூரில் இந்திய கம்யூ., கிழக்கு கிளை மாநாடு

பாகூரில் இந்திய கம்யூ., கிழக்கு கிளை மாநாடு

பாகூரில் இந்திய கம்யூ., கிழக்கு கிளை மாநாடு

பாகூரில் இந்திய கம்யூ., கிழக்கு கிளை மாநாடு

ADDED : ஜூன் 18, 2025 04:52 AM


Google News
Latest Tamil News
பாகூர்: பாகூரில் வெள்ள நீர் ஊருக்குள் புகுவதை தடுக்கும் வகையில், சித்தேரி ஆற்று வாய்க்காலில் தடுப்பு சுவர் அமைக்கப்பட வேண்டும் என இந்திய கம்யூ., கிழக்கு கிளை வலியுறுத்தி உள்ளது.

இந்திய கம்யூ., பாகூர் கிழக்கு கிளை மாநாட்டை, கட்சியின் மூத்த நிர்வாகி ராமமூர்த்தி துவங்கி வைத்து உரையாற்றினார். கிளை செயளாலர் முத்துநாயுடு அறிக்கை வாசித்தார். தொகுதி செயளாலர் ஆறுமுகம், மாநில குழு உறுப்பினர் விஜயபாலன், மாநில செயலாளர் எழிலன், மூத்த நிர்வாகிகள் கலியமூர்த்தி.

ராஜா, பொருளாளர் நாராயணன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். பாகூர் கிழக்கு கிளையின் புதிய நிர்வாகிகளாக செயளாலர் முத்துநாயுடு, துணை செயளாலர் முருகன், பொருளாளர் முத்து ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

மாநில செயலாளர் சலீம் புதிய நிர்வாகிகளை வாழ்த்தி பேசினார். தொடர்ந்து, இம்மாநாட்டில், வெள்ள நீர் ஊருக்குள் புகுவதை தடுக்கும் வகையில் சித்தேரி ஆற்று வாய்க்காலில், பாகூர் தூக்கு பாலம் முதல் விநாயகர் கோவில் வரை தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும். பாகூரில் கட்டப்பட்டுள்ள உள்விளையாட்டு அரங்கிற்கு விடுதலைப் போராட்ட வீரர் பேராசிரியர் அன்னுசாமி பெயரை சூட்ட வேண்டும்.

பாகூர் கிழக்கு பகுதியில் சமுதாய நலக்கூடம் கட்டப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us