/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மா.கம்யூ., பிரசார இயக்கம் துவக்கம் மா.கம்யூ., பிரசார இயக்கம் துவக்கம்
மா.கம்யூ., பிரசார இயக்கம் துவக்கம்
மா.கம்யூ., பிரசார இயக்கம் துவக்கம்
மா.கம்யூ., பிரசார இயக்கம் துவக்கம்
ADDED : ஜூன் 15, 2025 11:49 PM

புதுச்சேரி : புதுச்சேரியில் மா.கம்யூ., பிரசார இயக்கம் துவக்க நிகழ்ச்சி நடந்தது.
மா.கம்யூ., சார்பில், ஊழல், சட்டம், ஒழுங்கு சீர்கேடு, மது வணிகத்தில் ஆட்சி நடத்தும் என்.ஆர்.காங்., - பா.ஜ., கூட்டணி அரசை கண்டித்து மாநிலம் தழுவிய பிரசார இயக்கம் இன்று துவங்கி வரும் 22ம் தேதி வரை சைக்கிள் பிரசாரம், தெருமுனை கூட்டங்கள் நடக்கிறது.
இதன் துவக்க நிகழ்ச்சி அண்ணா சிலை அருகே நேற்று நடந்தது. மா.கம்யூ., அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன் பங்கேற்று, பிரசாரத்தை தொடங்கி வைத்தார். புதுச்சேரி மாநில செயலாளர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். செயற்குழு உறுப்பினர்கள் ராஜாங்கம், பெருமாள், சீனிவாசன், பிரபுராஜ், கலியமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.
தலைமை குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன், கூறுகையில், 'அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்திய அரசின் மீது அதிரடியான தாக்குதலை தொடர்ந்துள்ளார். இந்திய மக்களை வஞ்சிக்கிற திட்டங்களை செயல்படுத்துகிறார். மத்தியில் ஆளும் மோடி அரசு மாநில சுயாட்சி, உரிமைகளை பறிப்பது, மத்திய அரசின் திட்டங்களை மாநில அரசு மீது திணிப்பது, மாநிலங்களுக்கு நிதி கொடுக்காமல் வஞ்சித்து வருகிறது.
புதுச்சேரியில், வேலை வாய்ப்புகளை பெருக்க வேண்டும். மூடிக்கிடக்கும் பஞ்சாலைகளை திறக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தியும், சாராயக்கடைகள் திறக்கும் அரசை கண்டித்தும் தொடர் போராட்டம் நடத்தப்படும்' என்றார்.