/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ நிடி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்த முதல்வர்; தி.மு.க., செயற்குழு கூட்டத்தில் கண்டனம் நிடி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்த முதல்வர்; தி.மு.க., செயற்குழு கூட்டத்தில் கண்டனம்
நிடி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்த முதல்வர்; தி.மு.க., செயற்குழு கூட்டத்தில் கண்டனம்
நிடி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்த முதல்வர்; தி.மு.க., செயற்குழு கூட்டத்தில் கண்டனம்
நிடி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்த முதல்வர்; தி.மு.க., செயற்குழு கூட்டத்தில் கண்டனம்
ADDED : மே 27, 2025 07:26 AM

புதுச்சேரி: டெல்லியில் நடந்த நிடி ஆயோக் கூட்டத்தை , முதல்வர் ரங்கசாமி பங்கேற்காமல் புறக்கணித்ததை, தி.மு.க,, வன்மையாக கண்டித்துள்ளது.
புதுச்சேரி தி.மு.க, செயற்குழு கூட்டம், லப்போர்த் வீதி தி.மு.க., தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. அவைத் தலைவர் சிவக்குமார் தலைமை தாங்கினார். துணை அமைப்பாளர்கள் அனிபால் கென்னடி, எம்.எல்.ஏ., தைரியநாதன் முன்னிலை வகித்தனர். மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்., சிறப்புரை ஆற்றினார்.
கூட்டத்தில், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மூர்த்தி, நந்தா சரவணன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் லோகையன், ஆறுமுகம், காந்தி, அருட்செல்வி, பொதுக்குழு உறுப்பினர்கள் கோபால், கார்த்திகேயன், செல்வநாதன் உட்பட கட்சி முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நுாற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடியது போல் 102வது பிறந்த நாள் விழாவை, புதுச்சேரி மாநிலம் முழுவதும் தொண்டர்களின் குடும்ப விழாவாக கொண்டாட வேண்டும்.
ஜூன் 3ம் தேதி புதுச்சேரி மாவட்டம் மற்றும் தொகுதி தோறும் அவரது பேச்சுகளை ஒலிபரப்ப செய்ய வேண்டும். அந்த மாதம் முழுவதும் ரத்ததான மற்றும் மருத்துவ முகாம்கள் நடத்துவது, ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது, தமிழக திராவிட மாடல் ஆட்சியை போல, புதுச்சேரியிலும் தலைவர் ஸ்டாலின் ஆகியோடு ஆட்சி அமைய பாடுபடவேண்டும்.
டெல்லியில் நடந்த நிடி ஆயோக் கூட்டத்தில், புதுச்சேரி மாநில அந்தஸ்து போன்ற பிரச்னைகளை பிரதமர் முன் எடுத்துரைக்கும் வாய்ப்பைத் தவரவிட்டு, கூட்டத்தை புறக்கணித்த முதல்வரின், செயல்பாட்டை தி.மு.க. கண்டிக்கிறது.
நடப்பு கல்வி ஆண்டில் அனைத்து தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் 50 சதவீத இடத்தை முழுமையாகப் பெற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.