/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வர்த்தக சபை நிர்வாகிகள் தேர்வு விவகாரம் எம்.எல்.ஏ., உட்பட 15 பேர் மீது வழக்குப் பதிவு வர்த்தக சபை நிர்வாகிகள் தேர்வு விவகாரம் எம்.எல்.ஏ., உட்பட 15 பேர் மீது வழக்குப் பதிவு
வர்த்தக சபை நிர்வாகிகள் தேர்வு விவகாரம் எம்.எல்.ஏ., உட்பட 15 பேர் மீது வழக்குப் பதிவு
வர்த்தக சபை நிர்வாகிகள் தேர்வு விவகாரம் எம்.எல்.ஏ., உட்பட 15 பேர் மீது வழக்குப் பதிவு
வர்த்தக சபை நிர்வாகிகள் தேர்வு விவகாரம் எம்.எல்.ஏ., உட்பட 15 பேர் மீது வழக்குப் பதிவு
ADDED : செப் 01, 2025 03:50 AM
புதுச்சேரி : வர்த்தக சபைக்கு அரசு அனுமதி பெறாமல், நிர்வாகிகளை தேர்வு செய்ததாக சப் கலெக்டர் புகாரின் பேரில், எம்.எல்.ஏ., உட்பட 15 பேர் மீது சி.பி.சி.ஐ.டி., போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரியில் பிரெஞ்சு ஆட்சிக்காலத்தில் இருந்துவர்த்தக சபை செயல்பட்டு வருகிறது. இந்த வர்த்தக சபைக்கு பல கோடி ரூபாய் மதிப்பில் சொத்துகள் உள்ளன. கடந்த 1849ம் ஆண்டு துவங்கப்பட்ட வர்த்தக சபைக்கு 1934ம் ஆண்டு முதல் அரசே நிர்வாகிகளை தேர்தலை நடத்தி தேர்வு செய்து வந்தது.
அதன்படி, கவர்னர், மேயரை தொடர்ந்து தற்போது உள்ளாட்சித் துறை வர்த்தக சபைக்கான நிர்வாகிகள் தேர்தல் நடத்தும் பொறுப்பை ஏற்றுள்ளது.
ஆனால், 1975 ம் ஆண்டிற்கு பிறகு, வர்த்தக சபை தேர்தல் நடத்தப்படவில்லை. இதற்கிடையே, தேர்தல் நடத்தும் பொறுப்பை ஏற்றுள்ள உள்ளாட்சித் துறையின் அனுமதி பெறாமல், கடந்த 2000ம் ஆண்டு வர்த்தக சபைக்கு நிர்வாகிகளை அவர்களாகவே தேர்வு செய்து, பதிவு செய்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து வடக்கு சப் கலெக்டர் இஷிதா ரதி, சி.பி.சி.ஐ.டி., போலீஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் அளித்தார். அதன்பேரில், தொழிலதிபர்கள் குணசேகரன், எல்.பி. ரவி, வி.எம்.எஸ்.ரவி, நமச்சிவாயம், தண்டபாணி, சிவசங்கர்( உழவர்கரை தொகுதி எம்.எல்.ஏ.,), தேவக்குமார், முகமது சிராஜ், ஆனந்தன், ஞானசம்பந்தம், குகன், குமார், ராஜவேல், சதாசிவம், ஜெய்கணேஷ் ஆகிய 15 பேர் மீதும் (419- மோசடி, 468-ஏமாற்றும் நோக்கத்துடன் போலி ஆணவங்கள் உருவாக்குதல், 478-போலியான ஆவணத்தை உண்மையானது போல் மோசடியாக பயன்படுத்துவது) உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் இன்ஸ்பெக்டர் பாபுஜி மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையே, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள 15 பேரும், புதுச்சேரி கோர்ட்டில் முன் ஜாமின் கேட்டு, மனு தாக்கல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.