/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மீன் வாங்கி ரூ.13 லட்சம் மோசடி கேரளா ஏஜென்ட் மீது வழக்கு மீன் வாங்கி ரூ.13 லட்சம் மோசடி கேரளா ஏஜென்ட் மீது வழக்கு
மீன் வாங்கி ரூ.13 லட்சம் மோசடி கேரளா ஏஜென்ட் மீது வழக்கு
மீன் வாங்கி ரூ.13 லட்சம் மோசடி கேரளா ஏஜென்ட் மீது வழக்கு
மீன் வாங்கி ரூ.13 லட்சம் மோசடி கேரளா ஏஜென்ட் மீது வழக்கு
ADDED : செப் 20, 2025 11:58 PM
புதுச்சேரி : மீன் வாங்கி, 13 லட்சம் ரூபாய் மோசடி செய்த கேரளா ஏஜென்ட் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
பெரியக்காலாப்பட்டு மீனவர் கிராமத்தை சேர்ந்த வர் மூர்த்தி; மீன் ஏலம் எடுத்து, கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு விற்பனை செய்யும் ஏஜென்ட். கேரளா மாநிலம் ஆலப்புழாவை சேர்ந் த மீன் விற்பனை ஏஜென்டாக உள்ள பைசல் என்பவருக்கு, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன், லாரிகள் மூலம் மூர்த்தி மீன் அனுப்பினார்.
இதன் மூலம், 20 லட்சம் ரூபாய் வரை தர வேண்டியிருந்தது. பல முறை கேட்டும், பணம் தராமல் பைசல் தாமதப்படுத்தி வந்தார்.
இந்நிலையில், கேரளா மீன் விற்பனை செய்யும் நிர்வாகிகள் மூலம், பேச்சு வார்த்தை நடத்தியதன் பேரில், பைசல் தந்தை ஆசான் மூலம் 7 லட்சம் ரூபாய் மட்டும் வழங்கியுள்ளனர். மீதி தொகையை தராமல் அவர் ஏமாற்றி வந்தார்.
இதுகுறித்து, மூர்த்தி காலாப்பட்டு, போலீசில் புகார் செய்தார். பைசல் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.