ADDED : செப் 20, 2025 11:58 PM

புதுச்சேரி : வெங்கடேஸ்வரா கல்வி நிறுவனம், மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் சர்வதேச கடலோ ர துாய்மை தினத்தை முன்னிட்டு, கடற்கரை துாய்மைப் பணி நடந்தது.
ஆண்டுதோறும் செப்டம்பர் மாதத்தின் மூன்றாவது சனிக்கிழமை சர்வதேச கடலோர துாய்மை தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, வெங்கடேஸ்வரா கல்வி நிறுவனம், மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் பாண்டி மெரினா கடற்கரை துாய்மை பணி நேற்று நடந்தது.
வெங்கடேஸ்வரா கல்வி குழுமத்தின் முதன்மை இயக்க அதிகாரி வித்யா, மருத்துவ கல்லுாரியின் இயக்குநர் ரத்தினசாமி தலைமை தாங்கினர்.
கடற்கரை துாய்மை பணியினை அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.
இதில், மருந்தகம் மற்றும் பாரா மெடிக்கல் மாணவ, மாணவியர் பங்கேற்று, கடற்கரை துாய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
ஏற்பாடுகளை அங்கீகார தரவு மேலாண்மை அமைப்பு ஒருங்கிணைப்பாளர் லதா, ஆராய்ச்சி மையம் ரேவதி ஆகியோர் செய்திருந்தனர்.