/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஜி.எஸ்.டி., வரி குறைப்பால் புதுச்சேரியில் கார் விற்பனை அதிகரிப்பு கார் நிறுவனங்கள் மகிழ்ச்சி ஜி.எஸ்.டி., வரி குறைப்பால் புதுச்சேரியில் கார் விற்பனை அதிகரிப்பு கார் நிறுவனங்கள் மகிழ்ச்சி
ஜி.எஸ்.டி., வரி குறைப்பால் புதுச்சேரியில் கார் விற்பனை அதிகரிப்பு கார் நிறுவனங்கள் மகிழ்ச்சி
ஜி.எஸ்.டி., வரி குறைப்பால் புதுச்சேரியில் கார் விற்பனை அதிகரிப்பு கார் நிறுவனங்கள் மகிழ்ச்சி
ஜி.எஸ்.டி., வரி குறைப்பால் புதுச்சேரியில் கார் விற்பனை அதிகரிப்பு கார் நிறுவனங்கள் மகிழ்ச்சி
ADDED : செப் 21, 2025 11:17 PM
புதுச்சேரி: ஜி.எஸ்.டி., வரி குறைப்பால் புதுச்சேரியில் நடுத்தர கார்களின் விற்பனை அதிரடியாக உயர்ந்துள்ளது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் கடந்த செப்.3ம் தேதி, டில்லியில் நடந்த ஜி.எஸ்.டி.,கவுன்சில் கூட்டத்தில், ஜி.எஸ்.டி.,யில் இருந்த 12 சதவீதம் மற்றும் 28 சதவீதம் இருந்த பழைய வரி விகிதங்களை நீக்கிவிட்டு, 5 சதவீதம், 18 சதவீதம் ஆகிய இருவிகித நடைமுறையை பின்பற்ற முடிவெடுக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து இன்று முதல் புதிய ஜி.எஸ்.டி., வரிகள் நாடு முழுவதும் அமலுக்கு வருகிறது. இதனால் முன்பு 1000, சிசி இன்ஜின் கார்களுக்கு 28 சதவீதம் ஜி.எஸ்.டி., ஒரு சதவீதம் செஸ் வரி இருந்தது. அதில் 11 சதவீதம் வரி குறைக்கப்பட்டதால், தற்போது இந்தவகை கார்களுக்கு 18 சதவீத வரியாக மாறியுள்ளது.
1500 சிசி கொண்ட பெரிய கார்களுக்கு 28 சதவீதம் ஜி.எஸ்.டி. 17 சதவீதம் செஸ் வரி என மொத்தமாக 45 சதவீதம் வரி இருந்தது. இதில் 5 சதவீதம் வரி குறைக்கப்பட்டு 40 சதவீதமாக மாற்றப்பட்டுள்ளது.இதனால் 1000,சிசி கார்களுக்கு ரூ.60 ஆயிரமும் , 1500, சிசி கார்களுக்கு 30 ஆயிரம் வரை விலை குறைந்துள்ளது. இந்த வரிக்குறைப்பால் நடுத்தர மக்களிடையே கார் வாங்கும் எண்ணம் அதிகரித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றனர்.
அதையொட்டி ஜி.எஸ்.டி., வரி குறைந்ததால், கார் நிறுவனங்களும் ரூ.4 லட்சத்திற்குள் இருக்கும் சிறிய ரக கார்களின் விலையை தடாலடியாக குறைந்து, கார் விற்பனையை அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதைத்தொடர்ந்து புதுச்சேரியில் உள்ள ஒரு பிரபல கார் நிறுவனத்தில், இந்த மாதத்தில் மட்டும் நடுத்தர விலை உள்ள கார்கள் உள்பட 240 கார்கள் வாங்குவதற்கு முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதே போன்று மற்றொரு கார் நிறுவனத்தில் 130 கார்கள் வாங்குவதிற்கு முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது தொடர்ந்து விழா காலங்கள் வர உள்ளதால் இந்த ஆண்டு இறுதிக்குள் கார்களின் விற்பனை இன்னும் அதிகரிக்கும் என கார் நிறுவன ஊழியர்கள் கூறுகின்றன.